fbpx

‘Google Maps’ செயலியை பயன்படுத்த வேண்டாம்!… எச்சரிக்கை விடுத்த போலீசார்!

கேரளாவில், ‘Google Maps’ உதவியுடன் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டதில் 2 மருத்துவர்கள், ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து, பருவமழைக் காலங்களில் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்த வேண்டாம்’ என, கேரள போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களான அத்வைத், அஜ்மல் உள்ளிட்ட 5 பேர், நேற்று முன்தினம் காலை காரில் சென்றனர். கூகுள் மேப்ஸ் செயலி உதவியுடன் காரை ஓட்டுநர் இயக்கினார். கோதுருத் என்ற பகுதி அருகே கார் சென்றபோது, இடது புறம் திரும்புவதற்கு பதில், நேராக சென்று பெரியாறு ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், அத்வைத், அஜ்மல் உயிரிழந்த நிலையில், 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ‘பருவமழைக் காலங்களில் பருவமழைக் காலங்களில் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்த வேண்டாம்’ என, கேரள போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கூகுள் மேப்ஸ் செயலி உதவியுடன், காரை ஓட்டுநர் இயக்கி உள்ளார். கனமழையால் போதிய வெளிச்சம் இல்லாததால், மேப்பில் காட்டியபடி இடது புறம் திரும்புவதற்கு பதில், நேராகச் சென்றதால் கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மழைக்காலங்களில் பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டு விடும். இவை கூகுள் மேப்ஸ் செயலியில் உடனடியாக தெரிய வாய்ப்பில்லை. இதனால், மழைக் காலங்களில் அந்த செயலியை பயன்படுத்துவது, சில சமயங்களில் ஆபத்தாக முடியும். மேலும், மழைக் காலங்களில் அறிமுகமில்லாத வழிகளில் செல்வதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Kokila

Next Post

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம்...! வெளி மாநிலத்தவர் எப்படி விண்ணப்பிப்பது...? முழு விவரம்

Tue Oct 3 , 2023
வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், புதிய குடும்ப அட்டை எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்கின்ற திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை […]

You May Like