தற்போதைய வாழ்க்கை முறை, வேலை வாய்ப்பு நிலை, பொருளாதார நிலைமை ஆகியவை அனைத்தும் ஒரே கேள்வியை எழுப்புகின்றன. வேலை தேடி அலைய வேண்டுமா? அல்லது ஒரு தொழிலைத் தொடங்கி நிலையாக வளர வேண்டுமா? இன்று நம் சமூகத்தில், குறிப்பாக இளைஞர்களிடம் சுயதொழில் தொடங்கும் எண்ணம் அதிகரித்து வருகிறது. ஆனால், எந்தத் துறையைத் தேர்வு செய்வது? இன்று மக்களின் தேவை என்னவாக இருக்கிறது? என்பது பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கின்றனர்.
ஆன்லைன் விற்பனை : இணையத்தின் வளர்ச்சி, நம்மை வீட்டிலிருந்தே தொழில் செய்யும் அளவுக்கு மாற்றியுள்ளது. அமேசான், ஃபிளிப்கார்ட், மீஷோ போன்ற தளங்களில் வெறும் ரெஜிஸ்டர் செய்து, உங்களது தயாரிப்புகளை விற்பனை செய்யலாம். முதலில் சிறிய அளவில் டிரஸ்கள், ஹேண்ட்மேடு பொருட்கள், சமையல் பொருட்கள் போன்றவற்றில் தொடங்கி, நம்பிக்கை பெற்ற பிறகு விரிவுபடுத்தலாம்.
வீட்டு சமையல் பொருட்கள் : இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் ஆரோக்கியத்தை அதிகமாக விரும்புகின்றனர். அதனால், வீட்டிலேயே தயாரிக்கப்படும் சாம்பார் பொடி, ரசப் பொடி, மாவு, ஆர்கானிக் எண்ணெய்கள் ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மிகவும் குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய இந்த தொழிலில், உங்கள் சமையல் திறமையும் வருமானமாக மாற வாய்ப்புள்ளது.
டிஜிட்டல் சேவைகள் : டிஜிட்டல் மார்க்கெட்டிங், சோஷியல் மீடியா மேலாண்மை, வலைதள வடிவமைப்பு, வீடியோ எடிட்டிங், கணக்கியல் சேவைகள் போன்றவை இன்று மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளாக உள்ளன. குறைந்த காலத்தில் பயிற்சி எடுத்து, வீட்டில் இருந்தே, பல நிறுவனங்களுக்கு உங்கள் சேவையை வழங்கலாம். இதற்கு பெரிய முதலீடு வேண்டாம். லேப்டாப்பும் இணைய இணைப்பும் இருந்தால் போதும்.
கல்வி மற்றும் பயிற்சி மையங்கள் : மாணவர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சிகள், ஆங்கிலம், கணிதம், கணினி பயிற்சிகள் போன்றவை வீட்டு நிலத்தில் தொடங்கும் சிறு பயிற்சி மையங்களாக வளர்ந்துள்ளன. மேலும், ஆன்லைன் தளங்கள் மூலம் ஆசிரியராகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றலாம். ஒரு நல்ல பாடத்திட்டம், நம்பிக்கையான கற்பித்தல் என்றால் வருமானம் உறுதி.
நாட்டு மருந்து : இன்றைய மக்கள் இயற்கையை நோக்கி திரும்பி கொண்டிருக்கும் சூழலில், நாட்டு மருந்து பொருட்கள், ஹெர்பல் பிராடக்ட்ஸ், அழகு சார்ந்த இயற்கை பொருட்கள் ஆகியவைகளுக்கு மிகுந்த தேவையுள்ளது. நீங்கள் இயற்கை விஷயங்களில் ஆர்வமுள்ளவராக இருந்தால், இந்தத் துறையில் சிறந்த வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது.
சிறு தொழிற்சாலைகள் : அகர்பத்தி தயாரிப்பு, காகித கப், பேப்பர் பேக் தயாரிப்பு, மில்க் ஷேக் பவுடர், ஐஸ் கிரீம் பவுடர், கூலிங் பட்டி, சோப், டிடெர்ஜெண்ட் இவை அனைத்தும் குறைந்த முதலீட்டில் ஆரம்பித்து, சுற்றியுள்ள கடைகளுக்கு விற்பனை செய்யலாம்.
தொழில் என்பது பெரிய முதலீடு இல்லாமல் கூட தொடங்கலாம். உங்கள் திறமை, ஆர்வம், நேர்மை ஆகியவற்றை வைத்து உங்களுக்கேற்ற துறையை தேர்வு செய்து ஆரம்பிக்குங்கள்.
Read More : மழைக்காலத்தில் இதை கவனிக்கா விட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்..!! இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமா இருங்க..!!