திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர்கள் வேலு மற்றும் சசிகலா தம்பதியினர். இவரக்ளுக்கு நாகரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் குந்தைக்கு காய்ச்சல் இருந்ததால், பெற்றோர்கள் மாத்திரை கொடுத்துள்ளனர். அப்போது மாத்திரை திடீரென குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வந்த காவல் துறையினர் குழந்தை இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர். மாத்திரை தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.