மேற்கு ஆப்கானிஸ்தானில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
ஈரானில் இருந்து இருந்து புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது அதிவேகமாக சென்ற பேருந்து, லாரி மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி கோர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் பேருந்தில் இருந்தவர்கள் எனவும், லாரியில் பயணித்த இருவர், மோட்டார் சைக்கிளில் இருந்த இருவர் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தசாப்த கால மோதலுக்குப் பிறகு மோசமான சாலைகள், நெடுஞ்சாலைகளில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் ஒழுங்குமுறை இல்லாதது போன்ற காரணங்களால் ஆப்கானிஸ்தானில் போக்குவரத்து விபத்துக்கள் பொதுவானவை. கடந்த ஆண்டு டிசம்பரில், மத்திய ஆப்கானிஸ்தான் வழியாக நெடுஞ்சாலையில் எரிபொருள் டேங்கர் லாரி மற்றும் ஒரு லாரி மோதிய இரண்டு பேருந்து விபத்துகளில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள்..! காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கை புதிய சரிந்துள்ளது..!