முதல் மனைவியுடன் நிகழ்ச்சி.. இரண்டாவது மனைவியுடன் ஹனிமூன்.. அய்யோ குழப்புறீங்களே மாதம்பட்டி ரங்கராஜ்..!!

Madhampatti

திரை பிரபலங்கள் தொடங்கி, அரசியல்வாதிகளின் இல்லத் திருமணங்கள் வரை அனைத்து விழாக்களிலும் மாதம்பட்டி ரங்கராஜின் உணவு தான் பேமஸ். சமையல் துறையில் நீண்ட நாட்களாக கொடி கட்டி பறக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் மெகந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இருப்பினும் அந்த படம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை.


அதன் பிறகு கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். அதன் பிறகு தமிழக முழுவதும் பிரபலமான ஒரு செலிபிரேட்டியாக மாறி உள்ளார். ஏற்கனவே பிரபலமாக இருப்பினும் இந்த நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமாகி உள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு மகன்களும் உள்ளனர். சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

அந்த சர்ச்சைக்கு மத்தியில் மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிஸில்டாவும் கோவிலில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மாதம்பட்டி ரங்கராஜனின் இரண்டாவது மனைவி அறிவித்தார்.

இந்த தகவல் வந்த சில நாட்களில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுவும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் தான் இப்போது ஜாய் கிரிசில்டா மற்றொரு புகைப்படம் அடங்கிய வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதில், மாதம்பட்டி ரங்கராஜிற்கு லிப் டூ லிப் கிஸ் அடிக்கும் புகைப்படங்கள், அவருடன் ஒன்றாக சுற்றிய போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என்று எல்லாவற்றையும் வீடியோவாக பதிவிட்டு எனக்காக பொறந்தாயா என்ற பாடலையும் அந்த வீடியோவோடு இணைத்துள்ளார்.

அந்த வீடியோ பல புகைப்படங்கள் கொண்டதாக இருக்கிறது. அதில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த போட்டோவும் உள்ளது. இதேபோல் அவர்கள் கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படங்கள் உள்ளிட்ட பல அந்த வீடியோவில் இடம் பிடித்திருக்கிறது. இது தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Read more: ஓய்வெடுத்த பிறகும் சோர்வாக இருக்கிறதா?. இது மாரடைப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்!.

English Summary

The show with the first wife.. Honeymoon with the second wife.. Oh, you are confusing Madhampatti Rangaraj..!!

Next Post

எந்த உணவுகளை சாப்பிட்டால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்..? கிரில் சிக்கனில் இப்படி ஒரு ஆபத்தா..?

Wed Aug 20 , 2025
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் சுலபமாகக் கிடைக்கும் பல உணவுகளை நம்மால் தவிர்க்க முடியாமல் போகிறது. ஆனால், இந்த வசதிகளுக்குப் பின்னால் ஆபத்தும் மறைந்திருக்கிறது. குறிப்பாக புற்றுநோயின் அபாயம் உள்ளது. மருத்துவ மற்றும் சுகாதார ஆய்வுகளின் அடிப்படையில், புற்றுநோய் அபாயத்தை தூண்டும் சில முக்கியமான உணவுகளை இந்தப் பதிவில் பார்ப்போம். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் : போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், உலக சுகாதார அமைப்பினால் ‘குரூப் 1 புற்றுநோய் காரணிகள்’ என […]
Cancer 2025

You May Like