அவசரமான காலை பொழுதில், பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை பால் காய்ச்சுவது. பால் காய்ச்சுவதில் என்ன பிரச்சனை இருக்கு என்று நீங்கள் நினைக்கலாம். அடுப்பில் பாலை வைத்து விட்டு, அது பொங்குவதர்க்குள் வேறு வேலையை பார்க்க பலர் சென்று விடுவதுண்டு. பால் பொங்கும் வரை அருகில் இருந்து அடுப்பை ஆப் செய்யும் பொறுமை பலருக்கு இருக்காது. நாம் இப்படி செய்யும் போது, பல நேரங்களில் பால் பொங்கி அடுப்பை வீணாக்கிவிடும். பின்னர் அதை சுத்தம் செய்வதற்க்குள் மற்ற வேலைகள் கிடப்பில் இருந்து விடும்.
நாம் அருகில் இருந்தாலும், இல்லையென்றாலும் பால் வழிந்து கீழே ஊற்றாமல் இருக்க ஒரு எளிய டிப்ஸ் உண்டு. அது என்ன தெரியுமா?? நீங்கள் பால் காய்ச்சும் போது, பால் காய்ச்சும் பாத்திரத்தின் மேல் சில்வரில் உள்ள வடிகட்டியை வைத்து விடுங்கள். இது தான் அந்த டிப்ஸ். ஆம், உண்மை தான். சில்வரில் உள்ள வடிகட்டியை பால் காய்ச்சும் பாத்திரத்தின் மேல் வைத்து விட்டால், எவ்வளவு நேரம் ஆனாலும், பால் பொங்கினாலும், கொதித்தாலும் பாத்திரத்தை விட்டு ஒரு சொட்டு கூட கீழே சிந்தாது. இதை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்..