மொபைலில் இந்த சிறிய துளை இருப்பது ஏன் தெரியுமா..? பலருக்கு தெரியாத தகவல்..!

phone hole

இன்றைய உலகில் கையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை காண்பது அரிதாகிவிட்டது. நகரமோ, கிராமமோ எங்கு பார்த்தாலும், மக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஸ்மார்ட்போன் ஒரு அங்கமாகி விட்டது. சில ஆயிரம் முதல் பல லட்சம் வரை விலை கொண்ட செல்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. விலைக்கு ஏற்ப அம்சங்களும் மாறுபடும்.


கேமரா தரம், பேட்டரி திறன், நினைவகம் போன்ற அம்சங்களைப் பற்றி அனைவரும் ஆர்வத்துடன் பேசுகிறார்கள். ஆனால், நம் செல்போனின் வெளிப்புற அமைப்பில் உள்ள சிறு விவரங்களைப் பற்றி பெரும்பாலும் கவனம் செலுத்துவதில்லை. அதில் குறிப்பிடத்தக்கது, போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச் சிறிய துளை. பலரும் இதைக் கண்டிருப்பார்கள். ஆனால், அதன் பயன்பாடு என்ன என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

அந்த துளை சாதாரண அலங்காரம் அல்ல; அது தான் நம் குரலைத் தெளிவாகக் கேட்கச் செய்யும் இரைச்சல் ரத்து செய்யும் மைக்ரோஃபோன். நாம் யாரையாவது அழைக்கும் போது, இந்த மைக்ரோஃபோன் செயல்படுகிறது. சுற்றியுள்ள சத்தங்களை புறக்கணித்து, நம் குரலை மட்டும் துல்லியமாகப் பதிவு செய்து மறுபுறம் பேசுபவருக்கு அனுப்புகிறது. பேருந்து, சந்தை, கூட்டம் என எந்த இடத்திலும் இருந்தாலும், எதிர்புறம் பேசுபவர் நம் குரலை தெளிவாகக் கேட்பதற்கான காரணம் இதுவே.

சிறிய துளை என்றாலும், அதன் பங்களிப்பு மிகப் பெரியது. நவீன தொழில்நுட்பத்தின் அற்புதம் என்று சொல்லக் கூடியது. மக்கள் கவனிக்காமல் விடும் இந்தச் சிறு அம்சமே, இன்று கோடிக்கணக்கான செல்போன் பயனர்களின் உரையாடல்களை எளிதாக்கிக் கொண்டிருக்கிறது.

Read more: இந்த மரத்தின் இலை புற்றுநோயை குணப்படுத்தும்.! புதிய ஆராய்ச்சியில் வெளியான வியக்க வைக்கும் தகவல்..!

English Summary

Do you know why there is this small hole in the mobile..? Information that many people don’t know..!

Next Post

300 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த ரகசிய அறையை திறந்த விஞ்ஞானிகள்..! அது எதற்காக பயன்படுத்தப்பட்டது தெரியுமா?

Wed Aug 20 , 2025
ரஷ்யாவுடனான தொடர்ச்சியான போருக்கு மத்தியில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் ஒரு ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு உக்ரைனின் ஹாலிச்சில் உள்ள காலிசியன் கோட்டையின் கீழ் ஒரு ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1676 ஆம் ஆண்டு துருக்கிய-போலந்து போருக்குப் பிறகு கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டிருந்த ரகசிய அறையில், ஆயுதங்களை சேமிக்க அல்லது பீரங்கிகளை சுட அறை பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். உக்ரைனில் உள்ள ரகசிய அறை மற்றும் […]
Secret Room Ukraine

You May Like