ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பெட்ஷீட் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பம், ஒருவரது உயிரை பறிக்கும் அளவிற்கு சென்றுள்ளது. சந்தோஷ் தேவி எனும் பெண், தன் கணவர் மனோஜ் இடமிருந்து நீண்டகாலமாக சித்ரவதையை அனுபவித்து வந்துள்ளார். மனோஜ் ஒரு இ-ரிக்ஷா ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.
தனது குடும்ப சூழ்நிலையால் மனம் நொந்துபோன சண்டோஷ் தேவி, தனது தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ரிஷி ஸ்ரீவத்ஸவா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதையடுத்து, தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் மனோஜை தீர்த்துக் கட்ட இருவரும் முடிவெடுத்துள்ளனர்.
கொலை செய்வதற்கு முன் இருவரும் கூகுளில் “எப்படி கொலை செய்வது?” என தேடியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு திருப்திகரமான பதில்கள் கிடைக்கவில்லை. இதனால், பிரபல கிரைம் வெப் சீரிஸ்கள் மூலம் யோசனைகள் பெற்றனர்.
அதன்படி, ரிஷி மனோஜின் இ-ரிக்ஷாவில் பயணிபோல் பயணித்துள்ளார். பின்னர், ரிஷியின் நண்பர் மோகித் சர்மா ரிக்ஷாவில் ஏறியுள்ளார். இருவரும் சேர்ந்து, ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு மனோஜை அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார்.
இந்த கொலையை மறைப்பதற்காக உடைகளை மாற்றி, கைபேசி சிம்கார்டுகளை அழித்து, தடயங்களை அழிக்க முயன்றனர். ஆனால், இந்த வழக்கில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மனைவி சந்தோஷ் தேவி தனது காதலரான ரிஷியுடன் இணைந்து, கணவரை திட்டமிட்டு கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதில், மோகித் சர்மா மூன்றாவது நபராக நேரடியாக பங்கு பெற்றிருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் ஜெய்ப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்..!! உங்கள் வீடே பளிச்சென ஜொலிக்கும்..!! இல்லத்தரசிகளே சூப்பர் டிப்ஸ்..!!