“சளி, காய்ச்சல் வந்தால் ஆவி பிடி.. வியர்வை வந்தா எல்லாம் பறந்து போய்ரும்” என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அந்த வகையில், வியர்வின் பங்களிப்பு நம் உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் வெப்பம் அதிகரிக்கும் போதும், உடலால் வெளியேற்ற வேண்டிய நச்சுகள் குவியும் போதும், வியர்வாகவே அவை வெளியேறும். இதை இயற்கையின் ஒரு சுத்திகரிப்பு செயலாகவே பார்க்கலாம்.
உடல் நச்சு : நாம் சாப்பிடும் உணவு, சுவாசிக்கும் காற்று, பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்திலும் பரவலாக உள்ள மைக்ரோபிளாஸ்டிக், இரசாயனங்கள், பொல்யூஷன் போன்றவை நம் உடலில் தேங்குகின்றன. இதுபோன்ற நச்சுகளை வெளியேற்றும் செயல்களில் வியர்வும் முக்கியமானது.
நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் வெளியிட்ட ஆய்வு ஒன்றில், வியர்வை வழியாக பாதரசம், ஆர்சனிக், காட்மியம் போன்ற இரசாயனங்கள் வெளியேறுவதைக் கண்டறிந்துள்ளனர். இதுவே உடலுக்கு ஒரு இயற்கையான டிடாக்ஸ் முறை என்று சொல்லலாம்.
சருமம் : வியர்வை தோல் துளைகளைத் திறப்பதுடன், சருமத்தில் ஈரப்பதத்தையும் ஏற்படுத்துகிறது. இது வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு மிகுந்த நிவாரணமாக அமைகிறது. கூடவே, நடைபயிற்சி, யோகா போன்றவற்றின் போது அதிகரிக்கும் இரத்த ஓட்டம், ஆக்ஸிஜனின் விநியோகத்தையும் மேம்படுத்தி, தோலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது.
இரவில் வியர்வை : நீண்ட நாட்களாக தொடரும் இரவு வியர்வை, சாதாரணமாகக் கொள்ளக்கூடிய விஷயம் அல்ல. மருத்துவர்களின் வார்த்தையில், இது சில தீவிர உடல் மற்றும் மனநலக் கோளாறுகளுக்கான ஆரம்ப சின்னமாக இருக்கலாம்.
மன அழுத்தம் : நெருக்கடியான வேலை, தனிமை, குழப்பங்கள் என தினசரி மன அழுத்தங்கள் சிலருக்கு தூக்கத்தின் போதும் விடாமலே தொடரலாம். இதன் விளைவாக வியர்வை அதிகரிக்கும்.
மருந்துகள் : சில மனநல மருந்துகள், காபி அல்லது அதிகப்படியான தேநீர் ஆகியவையும் இரவில் வியர்வை அதிகமாக ஏற்படுத்தக்கூடியவை என Mayo Clinic ஆய்வு கூறுகிறது.
அடிக்கடி, காரணமில்லாமல் இரவில் வியர்வது தொடரும் பட்சத்தில், மருத்துவர் ஆலோசனை தேவை. வியர்வை மூலமாக சில நன்மைகள் கிடைக்குமானாலும், அது சமநிலையில் இருக்க வேண்டும். மன அழுத்தம், ஹார்மோன் மாற்றம், மருந்து பக்கவிளைவுகள் போன்றவற்றால் ஏற்படக்கூடிய வியர்வை அதிகரிப்பை தவிர்க்க, தினசரி வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம்.
Read More : கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் உணவுகள்..!! மாரடைப்பு, பக்கவாதம் வரும் அபாயம்..!! உடனே இதை ஃபாலோ பண்ணுங்க..!!