பெர்முடா முக்கோணம் ஒரு முக்கோண இடமாகும். இது ஒருபுறம் புளோரிடா, மறுபுறம் பெர்முடா மற்றும் மற்றொருபுறம் சான் ஜுவான், புவேர்ட்டோ ரிக்கோ ஆகியவற்றால் எல்லையாக உள்ளது. இந்த இடத்தை ட்ரேபீசியம் வடிவம் என்றும், டெவில் முக்கோணம் என்றும் அழைக்கிறார்கள்.
நூற்றுக்கணக்கான கப்பல்கள் மற்றும் விமானங்கள் அங்கு காணாமல் போயுள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். பெர்முடா முக்கோணத்தில் பல்வேறு விமானங்கள் மற்றும் கப்பல்கள் காணாமல் போனது பற்றி பல கோட்பாடுகள் உள்ளன. வேற்றுகிரகவாசிகள் வந்து கப்பல்கள் அல்லது விமானங்களை எடுத்துச் செல்றதாகவும், கடலுக்கு அடியில் பெரிய ராட்சதர்கள் இருப்பதாகவும் கருத்துக்கள் பரப்பப்படுகிரது.
பல தசாப்தங்களாக மர்மம் சூழ்ந்திருக்கும் பெர்முடா முக்கோணப் பகுதியில் நிகழும் கப்பல், விமான விபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய விஞ்ஞானி கார்ல் க்ரூசெல்னிக்கி (Karl Kruszelnicki) சுவாரஸ்யமான அறிவியல் விளக்கத்தை அளித்துள்ளார். விஞ்ஞானி க்ரூசெல்னிக்கி, இந்த விபத்துகளுக்குப் பின்னால் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை என்று தெளிவாகக் கூறுகிறார்.
அதிகப்படியான கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து, கடுமையான வானிலை, மனிதத் தவறுகள் ஆகியவையே காரணம் என அவர் வலியுறுத்துகிறார். இதையே ஆதரித்து, அமெரிக்காவின் NOAA (National Oceanic and Atmospheric Administration) மற்றும் லண்டனைச் சேர்ந்த Lloyd’s of London நிறுவனங்களும், பெர்முடா முக்கோணப் பகுதியில் நடக்கும் விபத்துகள் உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதிகமில்லை, அது சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் இயல்பான அளவிலேயே உள்ளது என்று பலமுறை விளக்கமளித்துள்ளன.
2010-ம் ஆண்டு NOAA வெளியிட்ட அறிக்கையிலும், “பெர்முடா முக்கோணத்தில் மர்மமாய் காணாமல்போவது, மற்ற கடல் பகுதிகளை விட அதிகம் என்ற ஆதாரம் இல்லை” எனவும் குறிப்பிடப்பட்டது. மேலும், NOAA சில காரணங்களை சுட்டிக்காட்டுகிறது:
* கடுமையான வானிலை மற்றும் வளைகுடா நீரோட்டத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்.
* கரீபியன் கடலில் உள்ள தீவுகள் காரணமாக உருவாகும் சிக்கலான வழிசெலுத்தல் பிரச்சினைகள்.
* காந்தப்புல வேறுபாடுகள் காரணமாக காந்த திசைகாட்டி “magnetic north”க்கு பதிலாக “true north” காட்டுவதால் ஏற்படும் குழப்பங்கள்.
அமெரிக்கக் கடற்படையும், கடலோரக் காவல்படையும், “இயற்கையின் சக்திகளும், மனிதத் தவறுகளும் இணைந்தே விபத்துகள் நிகழ்கின்றன; அதற்கு அமானுஷ்ய காரணங்கள் எதுவும் இல்லை” என சுட்டிக்காட்டியுள்ளன. இதனால், பெர்முடா முக்கோண மர்மம் எனப் பேசப்படும் கதைகள், உண்மையில் மனித கற்பனையும் ஊடக பரபரப்பும் உருவாக்கியவை என்பது விஞ்ஞானிகள் வலியுறுத்தும் நிலைப்பாடாகும்.
Read more: கூட்டுறவுச் சங்கங்களில் காலி பணியிடங்கள்…! அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு.…!