19 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நடைபெற்று வருகிறது. இதில் பல பிரிவுகளில் நடக்கும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய வீரர்கள், பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தற்போது ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசிய அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அணி தங்கம் வென்றுள்ளது. தீபிகா பள்ளிக்கள் மற்றும் ஹினம்தேர்பால் சிங் ஆகியோரின் முயற்சியால் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்க பதக்கம் கிடைத்துள்ளது.
ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா வென்றுள்ள 20-வது தங்கம் இதுவாகும். மொத்தம் 20 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என 82 பதக்கங்களுடன் புல்லிபட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது இந்தியா.