இன்று சமூக ஊடகங்களின் காலம். எது எப்போது வைரலாகும், யார் பிரபலமடைவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அதற்குச் சான்றாக, சமீபத்தில் வெளியான ஒரு ரயில் சம்பவ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும், இது ஒவ்வொரு நாளும் சுமார் 13,000 ரயில்களை இயக்குகிறது. ரயில் பயணம் வசதியானது மற்றும் பாதுகாப்பானது மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கு மலிவு விலையிலும் உள்ளது. உணவு முதல் கழிப்பறை வரை பல்வேறு வசதிகள் ரயிலில் கிடைக்கிறது.
இருப்பினும் ரயிலில் கிடைக்கும் வசதிகளை பலர் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக தவறாக பயன்படுத்தபடுவதாக அவ்வப்போது விமர்சனங்கள் எழுகிறது. அந்த வகையில் சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில், ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் ரயிலின் கழிப்பறையை தங்கள் தனிப்பட்ட சந்திப்புக்காக பயன்படுத்தியுள்ளனர். முதலில் இளைஞன் வெளியே வந்த காட்சியும், பின்னர் சிறிது நேரம் கழித்து பெண் வெளியே வந்த காட்சியும் பதிவாகியுள்ளது.
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ஒரு பயனர் “இது காதல் அல்ல; இன்றைய தலைமுறையினர் தற்காலிக சுகத்துக்காக வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர் “ரயிலையே ஓயோவாக மாற்றிவிட்டார்கள்” என்று விமர்சனம் எழுதியுள்ளார்.
அதேசமயம், சிலர் அனுமதி இல்லாமல் வீடியோ பதிவு செய்யப்பட்டதே தவறு என்றும், தனியுரிமை மீறப்படக் கூடாது என்றும் வலியுறுத்துகின்றனர். இந்த வீடியோவை @Warlock_Shubh என்ற ட்விட்டர் (X) கணக்கு பகிர்ந்துள்ளது. தற்போது இது மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளதோடு, லட்சக்கணக்கான எதிர்வினைகளையும் ஈர்த்துள்ளது.