Flash : தவெக மாநாட்டில் 3 பேர் மயக்கம்! இன்னும் தொடங்கவே இல்ல.. அதுக்குள்ள இப்படியா? தொண்டர்கள் அவதி..!

Madurai TVK Conference 1

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.. அந்த வகையில் விஜய்யின் தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. 2026 தேர்தல் திருப்புமுனை தேர்தலாக இருக்கும் என்று அக்கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.. முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்பதே அக்கட்சியின் நிலைப்பாடாக உள்ளது..


இந்த நிலையில் தவெகவின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரை, பாரபத்தியில் நடைபெற உள்ளது.. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் தொண்டர்களுக்காக சுமார் 2 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.. இந்த மாநாடு இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் என்று கூறப்படுகிறது.. ஆனால் மாநாட்டை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது..

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காலை முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.. மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளதால் தொண்டர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.. காலை 10 மணி அளவிலேயே சுமார் 25% இருக்கைகள் நிரம்பி உள்ளன..

இந்த நிலையில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் 3 பேர் மயக்கமடைந்துள்ளனர்.. ஒரு பெண் மற்றும் 2 ஆண்கள் என 3 தொண்டர்கள் மயக்கம் அடைந்தனர்.. 3 பேரும் மீட்கப்பட்டு, மருத்துவ முகாம்களுக்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.. மதுரையை பொறுத்தவரை நேற்றைய தினமே 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், இன்று காலை முதலே வெயில் கொளுத்தி வருகிறது.. எனினும் தொண்டர்கள் இருக்கும் இடத்திலேயே முதலுதவி அளிக்கும் வகையில் ட்ரோன்கள் வைக்கப்பட்டுள்ளது..

அதே போல் தவெக மாநாட்டுத் திடலில் குடிநீர் தீர்ந்துவிட்டதாக புகார் எழுந்தது.. தொண்டர்களுக்காக குடிநீர் வசதி செய்யப்பட்டது. குடிநீர் குழாய்களில் அமைக்கப்பட்டு, தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.. ஆனால் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் குடிநீர் வரவில்லை என்று தொண்டர்கள் கூறுகின்றனர்… தவெக நடத்திய விக்கிரவாண்டி மாநாட்டிலும் குடிநீர் பிரச்சனை சர்ச்சையானது.. மாலை நேரத்தில் மாநாடு தொடங்குவதால், மதியத்திற்கு பிறகே குழாய்களில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று கூறப்படுகிறது.. இந்த நிலையில் தற்போது மதுரை மாநாட்டிலும் குடிநீர் மற்றும் வெயில் பிரச்சனை சவாலாக மாறி உள்ளது..

RUPA

Next Post

ஆசிரியை மீது ஒருதலை காதல்..!! முன்னாள் மாணவன் செய்த பயங்கரம்..!! அலறியடித்து உதவிக் கேட்ட பரிதாபம்..!!

Thu Aug 21 , 2025
மத்தியப்பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. எக்ஸலன்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவராக இருந்த சூர்யன்ஷ் கோச்சார் (வயது 18) தனது முன்னாள் ஆசிரியை (வயது 26) மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் திங்கள் பிற்பகல் 3:30 மணி அளவில், ஆசிரியை வீட்டில் தனியாக இருந்தபோது இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. திடீரென அவரது வீட்டிற்கு வந்த சூர்யன்ஷ், பெட்ரோல் […]
Crime 2025 7

You May Like