நீங்கள் ஒழுங்காக டயட் பின்பற்றியும், தவறாமல் ஜிம்முக்கு சென்றாலும், இனிப்பை தவிர்த்தாலும் உடல் எடை மட்டும் அதிகரிக்கிறதா..? இது தனிப்பட்ட விஷயமல்ல. பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான சிக்கல்தான். உடல் எடையை குறைக்கும் செயல்முறை என்பது வெறும் கலோரி குறைக்கும் முயற்சி மட்டும் அல்ல. உங்கள் தூக்கம், மன அழுத்தம், அன்றாட பழக்க வழக்கங்கள் என பல காரணங்கள் உள்ளது.
காலை உணவை தவிர்ப்பது : ஒரு நாளின் முக்கியமான உணவு என்றால் அது காலை உணவு தான். ஆனால், அதைக் கடந்து விட்டால் உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். இரத்த சர்க்கரையின் சமநிலை சீர்குலையும். இதனால் பசி ஹார்மோன்கள் அதிகரித்து, பிற்பகுதியில் அதிக கலோரி உள்ள உணவுகளை விரும்பும் மனநிலை உருவாகிறது.
மிக வேகமாக சாப்பிடுவது : உணவின் ருசியை உணராமல், பத்து நிமிடத்தில் சாப்பாட்டை முடித்துவிடும் பழக்கம் இருக்கிறதா..? மூளை, வயிறு நிரம்பியதை உணர 15-20 நிமிடங்கள் தேவைப்படும். அதற்கு முன்பே நீங்கள் அதிக கலோரி எடுத்துவிடுகிறீர்கள் என்பதை உணரமாட்டீர்கள்.
மறைக்கப்பட்ட சர்க்கரை : சோடா, எனர்ஜி டிரிங்க்ஸ், இனிப்பு சுவையுடன் கூடிய காஃபி இவை அனைத்தும் சர்க்கரை தான். ஒரு பானத்தில் 25-40 கிராம் வரை சர்க்கரை இருக்கலாம். இவை இன்சுலின் அளவை உயர்த்தி, உணர்ச்சிவசப்படுத்தும் பசிப் போக்குகளை தூண்டி, உடலில் கொழுப்பைச் சேமிக்க வைக்கும்.
உணவில் கவனம் : டிவி பார்க்கும் போதும், செல்போனை பயன்படுத்திக் கொண்டும் சாப்பிடுபவரா நீங்கள்? இது “மைண்ட்லெஸ் ஈட்டிங்” எனப்படுவதை உருவாக்குகிறது. உணர்ச்சி அடிப்படையிலான உணவுணர்வு பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக, எதிர்பார்த்ததை விட அதிகமாக உட்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகிறது.
மன அழுத்தம் : நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்ற உணர்வு கூட, உங்கள் உடலில் கார்டிசோல் (Cortisol) அளவு அதிகரிக்கக்கூடும். இது வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பை சேர்க்கும்.
தூக்கம் : தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறீர்கள் என்றால், உங்கள் உடல் ஹார்மோன் சமநிலையை கெடுக்கும். கிரெலின், லெப்டின் ஆகிய பசி தொடர்பான ஹார்மோன்கள் தாறுமாறாக இயங்க தொடங்கும். இதனால், இனிப்பு உணவுகளுக்கான ஆசை அதிகரிக்கும்.
Read More : ஆசிரியை மீது ஒருதலை காதல்..!! முன்னாள் மாணவன் செய்த பயங்கரம்..!! அலறியடித்து உதவிக் கேட்ட பரிதாபம்..!!