மோகன்லாலின் திரிஷ்யம் திரைப்பட பாணியில் 30 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஷபாப் அலி. இவர், பெயிண்டராக வேலைபார்த்து வரும் நிலையில், இவரது மனைவி பார்த்திமா. இந்நிலையில், தன்னுடைய மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக கணவர் ஷபாப் அலி சந்தேகப்பட்டுள்ளார். இதனால், பலமுறை எச்சரித்தும் அவர் கேட்காததால், தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி அவர் தன்னுடைய மனைவிக்கு விஷம் மற்றும் மயக்க மாத்திரை கொடுத்துள்ளார்.
இதை சாப்பிட்டதும் பார்த்திமா உயிரிழந்தார். இதையடுத்து, தனது கூட்டாளியான சாருக் கான் மற்றும் தன்வீர் உள்பட 3 பேரை உதவிக்கு அழைத்துள்ளார் ஹபாப் அலி. பின்னர், அவர்களது உதவியுடன் காரில் மனைவியின் சடலத்தை வைத்து சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று புதைத்துள்ளார். மேலும், போலீசுக்கு ஆதாரம் எதுவும் கிடைக்காமல் இருக்க பாத்திமாவின் உடைகளை கால்வாயில் தூக்கி வீசியுள்ளார்.
பின்னர், இந்த குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காக அவர் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று பாத்திமாவின் செல்போனில் இருந்து அவரே தன்னுடைய செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தியையும் அனுப்பியுள்ளார். அதில், அவள் வேறொருவருடன் ஓடிச்சென்று விட்டதாகவும், அவரை திருமணம் செய்யப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சூழலில் தான், பாத்திமாவின் நண்பர் அவரை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, போலீசார் நடத்திய விசாரணையில், முக்கிய சிசிடிவி காட்சி சிக்கியது. அதை வைத்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். மேலும், தனது மனைவியின் கள்ளத்தொடர்பு காரணமாகவே கொலை செய்ததாக கணவர் ஷபாப் அலி ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.