தவெகவின் 2வது மாநில மாநாடு இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது.. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காலை முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.. இதனால் மதுரை மாநகரே களைகட்டி உள்ளது.. எனினும் வெயிலின் தாக்கத்தல் தொண்டர்கள் அவதியுறும் நிலையில் மாநாட்டை முன்னரே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. தற்போதே மேடையில் தவெக நிர்வாகிகள் அமர வைக்கப்பட்டுள்ளனர்.. இன்னும் சிறிது நேரத்தில் தவெக தலைவர் விஜய் மேடைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது..
முதலில் மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் என்று கூறப்பட்டது, பின்னர் 3 மணிக்கு மாநாடு தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இந்த மாநாடு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது..
இந்த நிலையில் மதுரை பாரபத்தியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொளுத்தி வருவதால், வெயிலை சமாளிக்க முடியாமல் தொண்டர்கள் திணறி வருகின்றனர்.. தவெக மாநாட்டு திடலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொண்டர்கள் அடுத்தடுத்து பலர் மயக்கமடைந்தனர்.. தொண்டர்கள் மட்டுமின்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மயக்கம், தலைசுற்றல் வாந்தி உள்ளிட்ட காரணங்களால் 374 பேருக்கு முதலுதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. முதலுதவி பெற்றும் உடல் நிலை சீராகாதவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.. அதன்படி இதுவரை 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்காக மாநாட்டு திடலின் ஓரத்தில் சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.. வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் தரை விரிப்புகளை எடுத்து கூடாரம் போல் பிடித்து, நிழலுக்குள் தொண்டர்கள் தஞ்சமடைந்து வருகின்றனர்.. வெயில் கொளுத்தி வரும் நிலையில், தொண்டர்கள் இருக்கும் பகுதிக்கே முதலுதவி பெட்டிகள் ட்ரோன்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன.. மேலும் தொண்டர்களுக்கு ஜூஸ், குளிர்பானங்களும் வழங்கப்பட்டு வருகின்றன..
Read More : Flash : முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு..? சற்று நேரத்தில் மேடைக்கு வரும் விஜய்..? இதுதான் காரணம்!