தவெகவின் 2வது மாநில மாநாடு இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காலை முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்… இதனால் மதுரை மாநகரே களைகட்டி உள்ளது..
எனினும் மதுரை பாரபத்தியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொளுத்தி வருவதால், வெயிலை சமாளிக்க முடியாமல் தொண்டர்கள் திணறி வருகின்றனர்.. தவெக மாநாட்டு திடலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொண்டர்கள் அடுத்தடுத்து பலர் மயக்கமடைந்தனர்.. தொண்டர்கள் மட்டுமின்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தவெக மாநாட்டிற்கு சென்ற சென்னையை சேர்ந்த பிரபாகர் என்பவர் சக்கிமங்கலம் அருகே மாரடைப்பால் உயிரிழந்தார்.. வெயிலின் தாக்கத்தால் சுமார் 350க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்த நிலையில் அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. எனினும் அவர்களின் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இந்த நிலையில் தவெக மாநாட்டிற்கு சென்ற நபரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநாட்டுத் திடலில் 40-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..