இந்து புராணங்களின்படி, கணேஷ் சதுர்த்தி அன்று சந்திரனை நேரடியாக பார்ப்பது அசுபமாக கருதப்படுகிறது. புராண கதைகளின்படி, தனது பக்தர் ஒருவர் வீட்டில் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, மிஞ்சிய உணவுகளை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் வீட்டை நோக்கி நடந்து சென்றார்.
சாப்பிட்ட களைப்பில் மெதுவாக நடத்த விநாயகர் தடுமாறி கீழே விழுந்துவிட்டார். அவர் கையில் இருந்த உணவும் கீழே விழுந்துச் சிதறிவிட்டது. உடனே எழுந்து தன் மேல் படிந்த மண்ணை உதறித்தட்டிய அவர், யாரும் பார்த்தார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார். நள்ளிரவு என்பதால் ஒருவரும் விழித்திருக்கவில்லை. எனவே சிதறிய உணவுகளை எடுத்துக்கொண்டு நிமிர்ந்த விநாயகர் வானில் நிலா இருப்பதைப் பார்த்தார்.
தன்னைப் பெரிய அழகன் என்று நினைத்துக்கொள்ளும் சந்திரன் , விநாயகர் தள்ளாடி நடந்துவந்து கீழே விழுந்ததையும் மண்ணில் விழுந்த உணவுகளைப் பொறுக்கி எடுத்ததையும் பார்த்து கேலியாகச் சிரித்துக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த விநாயகருக்குக் கடுமையாக கோபம் வந்துவிட்டது. கோபமடைந்த விநாயகர் சந்திரனை சபித்தார்.
அந்த சாபத்தால் சந்திரனைப் பார்த்தவர்கள் மித்ய தோஷத்தால், பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்மறை நிகழ்வுகள் போன்ற பாதிப்புகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது. புராணக் கதைகளில் ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்க்கை உதாரணமாகக் குறிப்பிடப்படுகிறது. கணேஷ் சதுர்த்தி அன்று சந்திரனை நேரடியாகப் பார்த்த கிருஷ்ணர், சியமந்தக ரத்தினம் தொடர்பான பொய்யான குற்றச்சாட்டில் சிக்கினார். பின்னர் உண்மை வெளிப்பட்டு, பாதிப்பு நீங்கியது.
சந்திரனை பார்த்தால் என்ன செய்ய வேண்டும்?
* சந்திரனை பார்த்த உடனே மனமுருகி வழிபாடு செய்யுங்கள். குடும்பத்திற்கு எந்தவித கஷ்டமும் வராமை வேண்டி விநாயக பெருமானை வணங்குங்கள்.
* ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். இதன் மூலம் பிதற்றல்களை தவிர்க்க முடியும்.
* சந்திரனை தவறுதலாகப் பார்த்தால், அடுத்த புதன்கிழமை விநாயகர் கோவில் செல்லவும், அன்றைய தினம் விநாயகப் பெருமானை வழிபடவும்.
* விநாயகர் பெருமானுக்கு 21 துர்வாக் கட்டிகளை சமர்பிக்கவும்.
* களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சித்தியை வாங்கி, சந்தனம், குங்குமம் வைத்து தொப்பையில் காசு வைக்கவும்.
* பிள்ளையாருக்கு இடுப்பில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை, எருக்கம் மாலை அணிவித்து, குன்றிமணியால் கண்களை திறக்க செய்யவும்.
* இந்த பரிகாரங்களைச் செய்தால், சந்திரனை பார்த்த தோஷம் நீங்கி, தடைகள் உடைந்து, வெற்றி மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
Read more: அதிர்ச்சி.. தவெக மாநாடு.. விஜய்யின் தொண்டர் மாரடைப்பால் மரணம்!