தவெக மாநில மாநாட்டில் விஜய் சுமார் 40 நிமிடங்கள் உரையாற்றினார்.. அப்போது பாஜக, திமுகவை விமர்சித்த அவர் 2026 தேர்தலில் வரலாறு திரும்பும் என்று கூறினார்.. மேலும் பேசிய அவர் “ இந்த விஜய், உங்க விஜய் உங்கக் கூட உங்கள் கூட உண்மையாக பேச, உங்களுக்காக சேவை செய்ய நான் வர்ரேன்.. சொல் அல்ல.. செயல் தான் முக்கியம்.. நல்லது செய்யறதுக்கு மட்டும் தான் இந்த விஜய்.. ஒரு அரசியல் தலைவன் உண்மையானவனா? அது தான் முக்கியம்..
ஒரு குட்டிக்கதை சொல்றேன்.. ஒரு நாட்டில் ஒரு ராஜா, தனக்கு பக்கபலமா துணையாக கூட இருப்பதற்காக, ஒரு தளபதியை தேடுறாரு.. சரியான தகுதிகளோட 10 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.. அதில் ஒருவரை மட்டும் தான் தேர்வு செய்ய வேண்டும்.. அதனால் அந்த ராஜா, ஒரு டெஸ்ட் வைக்கிறார்.. அந்த 10 பேரிடமும் ஒரு விதை நெல்லை கொடுத்த இதை நல்லா வளர்த்து, 3 மாதம் கழித்து வரச் சொல்கிறார்..
3 மாதம் கழித்து ஒருவர் ஆள் உயரத்திற்கு வளர்த்திருந்தார்.. ஒருவர் தோள் உயரத்திற்கு வளர்த்திருந்தார்.. 9 பேரும் நன்றாக வளர்த்துக் கொண்டு வந்தனர். ஒரு மட்டும் வெறும் தொட்டியோடு வந்தார்.. அவரிடம் என்னன்னு கேட்ட போது நானும் தண்ணீர் ஊற்றி ஊற்றி பார்க்கிறேன்.. உரம் வைத்து வைத்து பார்க்கிறேன்.. வளரவே இல்லை.. என்ன செய்கிறது என தெரியவில்லை என்று கூறினார்..
அவரை கட்டியணைத்த ராஜா நீ தான் என் தளபதி என்று கூறினார்.. ஏன்னா அந்த 10 பேரிடம் கொடுத்தது.. அவித்த விதை நெல். முளைக்கவே முளைக்காது, அந்த 9 பேரும் வேற விதை நெல்லை வாங்கி அதை வளர்த்து ராஜாவை ஏமாற்றி உள்ளனர்.. ஆனால் இவர் மட்டும் உண்மையை போட்டு உடைத்தார்.. இப்போ நீங்க எல்லாரும் தான் அந்த ராஜா.. நீங்க தேர்ந்தெடுக்கப்போற அந்த தளபதி.. சும்மா சினிமாக்காரன் சினிமாக்காரன்.. சொல்லிட்டு இருக்காங்க..
அம்பேத்கர், காமராஜர், நல்லக்கண்ணு ஐயா ஆகியோரை தோற்கடித்தது சினிமாக்காரன் இல்லை.. அரசியல்வாதி.. எல்லா அரசியல்வாதியும் அறிவாளியும் இல்லை… எல்லா சினிமாக்காரனும் முட்டாளும் கிடையாது.. நம்பிக்கை உடன் இருங்க.. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்..” என்று தெரிவித்தார்..



