கட்சி தொடங்கி உடன் ஆட்சிக்கு வர முடியாது, முதலில் உழைக்க வேண்டும் என மறைமுகமாக விஜய்க்கு இபிஎஸ் அறிவுரை கூறியுள்ளார்..
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள்.. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே சிலர் பேசுகின்றனர்.. பாவம்.. அவர்கள் அறியாமையில் இருக்கின்றனர்.. இதுகூட தெரியாமல் ஒரு தலைவர் இருக்கிறார் என்றால், அவரின் தொண்டர்கள் எப்படி இருப்பார்கள்?
மொழிப்போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற அண்ணா மக்களுக்காக உழைத்து முதல்வரானார்.. எம்ஜிஆர் கட்சி தொடங்கி 5 ஆண்டுகள் மக்களுக்கு உழைத்து நன்மதிப்பை பெற்ற பின்னர் தான் முதலமைச்சர் ஆனார்.. ஜெயலலிதா பல ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்து தான் முதல்வரானார்.. ஆனால் சிலர் கட்சி தொடங்கி உடனே இமாலய சாதனை செய்தது போல் மேடையில் பேசுகின்றனர்..
ஒரு மரம் எடுத்த உடனேயே பழம் தந்துவிடாது, முதலில் செடியை நட வேண்டும்.. பின்னர் தண்ணீர் ஊற்றி வேண்டும்.. அதை பரிமாரிக்க வேண்டும்.. அது மெல்ல பெரிதாகி மரமாகி, பின்னர் அந்த மரம் பூ பூத்து காய், காய்த்து, கனி கொடுக்கும்.. அது போல தான் அரசியல் இயக்கமும்.. எடுத்த உடனே எந்த இயக்குமும் ஆட்சிக்கு வர முடியாது.. 51 ஆண்டுகள் மக்களுக்காக உழைத்து இந்த நிலை வந்துள்ளேன்.. இதுவே நிரந்தரம்..
சிலர் உழைக்காமல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடலாம் என்று நினைக்கின்றனர்.. அது என்றும் நடக்காது.. புதிய கட்சி தொடங்கும் அனைவரும் நமது கட்சி தலைவர்களின் படங்களை வைத்து தான் தொடங்க முடியும்.. ” என்று தெரிவித்தார்..
தவெக மாநாட்டில் எம்.ஜி.ஆர் கட் அவுட் வைக்கப்பட்ட நிலையில், விஜய் அதிமுக உடன் கூட்டணி வைக்கப் போகிறாரா என்ற சந்தேகம் எழுந்தது.. ஆனால் இன்றைய தவெக மாநாட்டில் பேசிய விஜய், எம்.ஜி.ஆரை உயர்வாக பேசிய விஜய், அதிமுக யார் கையில் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.. மேலும் அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி என்றும் விஜய் கூறியிருந்தார்.. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு விஜய்க்கு கொடுத்த பதிலடியாக பார்க்கப்படுகிறது..
Read More : “நீங்க தேர்ந்தெடுக்கப்போற அந்த தளபதி.. “ மதுரை மாநாட்டில் விஜய் சொன்ன குட்டிக்கதை என்ன தெரியுமா?