மனித உயிரையே பறிக்கும் வண்டு..!! உங்களை கடித்துவிட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்..? என்ன அறிகுறிகள் இருக்கும்..?

Beetles 2025

ஒரு சிறு வண்டு கடித்தாலே உயிரிழப்பா..? இந்த கேள்வி பலருக்கும் சாதாரணமாகத் தோன்றலாம். ஆம், தவறான நேரத்தில் தவறான வகை வண்டுக்கு உடலில் ஒவ்வாமை இருந்தால், அது உயிரிழப்புக்கும் காரணமாகலாம் என்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.


வண்டுக்கடிகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பலருக்கும் சரியான புரிதல் இல்லை. கதண்டு வண்டுகள் (Yellow Jackets) போன்ற சில வண்டுகள் மனிதர்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு நெருக்கம் கொண்டாலோ, புகை மற்றும் சத்தத்தால் எரிச்சலடைந்தாலோ, கூட்டம் கூட்டமாக தாக்கக் கூடும். அவை பெரும்பாலும் மரக்கிளைகளில் கூடுகட்டி வாழும் மிகவும் முன்கோபியான உயிரினங்கள்.

கதண்டுக் குளவியின் கொடுக்கில் மாஸ்டோபேரான் (Mastoparan) மற்றும் பாஸ்போலைப்பேஸ் A1 (Phospholipase A1) எனும் இரசாயனங்கள் உள்ளன. இவை பசியாத இரசாயனக் கூட்டுகள் அல்ல. சிலருக்கு இது சாதாரண வலியாக முடிவடையலாம். வண்டு கடித்த இடம் சிவப்பாக மாறி, வீக்கம் ஏற்பட்டு, சில நாட்களில் குணமாகிவிடும். ஆனால் சிலருக்கு, குறிப்பாக அந்த நச்சுப் பொருள்களுக்கு உடலே எதிர்வினை காட்டும் நிலையில் இருந்தால், தீவிர அலர்ஜி அனாஃபிலாக்சிஸ் ஏற்படலாம். இது உடனடியாக சுவாசக் குழாய் சுருங்கி மூச்சுத் திணறல், இருமல், வியர்த்தல், வாந்தி, தோளில் நெருப்பு போல உணர்வு, ரத்த அழுத்தம் வீழ்வு என விரைவில் உயிருக்கு ஆபத்தாக மாறும்.

அனாஃபிலாக்சிஸ் ஏற்பட்டால், அது விரைவில் அட்ரினலின்/எபிநெப்ரின் மருந்து செலுத்தப்பட வேண்டிய அவசர நிலையாக மாறுகிறது. அமெரிக்காவிலும் பிற மேலை நாடுகளிலும், வண்டுக்கடி அலர்ஜி உள்ளவர்கள் EpiPen எனும் ஒரு சிறு மருந்துப் பேனா வகையை எப்போதும் உடன் வைத்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் இதுபோன்ற விழிப்புணர்வும், கிடைக்கும் வசதிகளும் இல்லை என்பதுதான் வேதனை. இதன் மீது அரசும் மருத்துவத்துறையும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் மிகுந்தது என்கிறார் மருத்துவர் ஃபரூக்.

அலர்ஜி இல்லாத ஒருவர் கூட, ஒரே நேரத்தில் பல கதண்டுகளிடம் கொட்டுக் கொட்டிக் கடிக்கப்பட்டால், அந்த நச்சுப் பொருள் உடலில் அதிகமாகச் சேருவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். வண்டுக் கடியடைந்ததும், முதலில் புண் பகுதியில் இருந்தால் கொடுக்கையை மெதுவாக அகற்ற வேண்டும். அதன் பிறகு சோப்புடன் கழுவி, ஐஸ் கட்டி வைத்து சுவாசத்தை கட்டுப்படுத்த வேண்டும். டெட்டனஸ் தடுப்பூசி மற்றும் பிற பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால், கடிக்கு உடனடியாக மூச்சுத் திணறல் அல்லது தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே 108-ஐ அழைத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அங்கு எபிநெப்ரின் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் மூலம் உயிரைக் காப்பாற்ற முடியும். மருத்துவமனை அருகில் இல்லாத நிலை ஏற்பட்டால், நோயாளி சுவாசிக்கவில்லை என்றால் CPR (இதய-சுவாச மீட்பு) செயல்முறையைத் தொடங்க வேண்டும். இது, மருத்துவ உதவி கிடைக்கும் வரை உயிர்ப் பராமரிப்புக்கு முக்கியமாக இருக்கிறது.

அதேசமயம், வண்டுகள் அதிகமாக காணப்படும் பகுதிகளிலிருந்து விலகுவது சிறந்தது. குறிப்பாக வெயில் காலங்களில் அவை அதிக சீற்றமுடன் இருப்பதால், காட்டுப் பகுதிகளில் பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அடர் நிற உடைகள் அணிய வேண்டாம். பூச்சி விரட்டும் களிம்புகள், ஸ்பிரேக்கள் கொண்டு செல்லவும். ஒரு சில கதண்டுகள் பின் தொடர்ந்து தாக்கினால், அமைதியாகச் செயல்பட்டு கீழே படுத்து சுருண்டு விடுவதே பாதுகாப்பான நடைமுறையாகும். எதையும் தாக்க முயலாதீர்கள். அது மேலும் தாக்கத்தைத் தூண்டக்கூடும்.

வண்டுகள், சுற்றுச்சூழலுக்கு தேவையானவை. அவை மகரந்தச் சேர்க்கையில் பங்கு வகிக்கின்றன. ஆனால் அவற்றின் வாழ்விடம் அல்லது கூடுக்களில் நுழையும் போது, அவற்றின் களத்துக்கு நாம் சென்றுவிட்டோம் என்பதை உணர்ந்து சீரான கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

Read More : செம அறிவிப்பு..!! சென்னை மெட்ரோவில் வேலைவாய்ப்பு..!! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

CHELLA

Next Post

கேமிங் மசோதாவால் Dream11-க்கு பெரும் அடி!. ரியல் மணி கேமிங்(RMG) செயல்பாடுகளை நிறுத்த முடிவு!.

Fri Aug 22 , 2025
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் விளையாட்டுத் துறையில், குறிப்பாக உண்மையான பணத்தை உள்ளடக்கிய விளையாட்டுகள் (Real Money Games) ஏற்படுத்தும் சமூகப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ‘ஆன்லைன் விளையாட்டுகளை மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதா, 2025’ எனப் பெயரிடப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21, 2025) நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் சட்டம், குடியரசுத் […]
Online Gaming Bill dream11 11zon

You May Like