இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் விளையாட்டுத் துறையில், குறிப்பாக உண்மையான பணத்தை உள்ளடக்கிய விளையாட்டுகள் (Real Money Games) ஏற்படுத்தும் சமூகப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ‘ஆன்லைன் விளையாட்டுகளை மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதா, 2025’ எனப் பெயரிடப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21, 2025) நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் சட்டம், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஃபேண்டஸி கேமிங் நிறுவனமான டிரீம்11 இன் தாய் நிறுவனமான டிரீம் ஸ்போர்ட்ஸ், இந்தியாவின் புதிய ஆன்லைன் கேமிங் மசோதா 2025 ஐத் தொடர்ந்து அதன் ரியல் மணி கேமிங் (RMG) செயல்பாடுகளை நிறுத்த உள்ளதாக Entrackr செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து இதுவரை ட்ரீம்11 கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
படி, ஆகஸ்ட் 20 அன்று நடைபெற்ற உள்துறை Town Hall கூட்டத்தில், பண அடிப்படையிலான (Real Money Gaming – RMG) செயல்பாடுகளை நிறுத்தும் முடிவை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், Dream Sports நிறுவனத்தின் வருடாந்திர வருவாயில் 67% க்கும் அதிகமான பங்கை RMG வழங்குகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, உண்மையான பண விளையாட்டுகளின் ஆண்டு வருவாயில் 67 சதவீதம் டிரீம் 11 இலிருந்து மட்டும் வந்தது.
Entrackr வெளியிட்ட அறிக்கையில் மேலும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன் படி, Dream11 இனி RMG (Real Money Gaming) இருந்து விலகி, Sportz Drip, FanCode போன்ற non-real money வாய்ப்புகளை விரிவுபடுத்த உள்ளதாகவும் இது தவிர, Willow TV மற்றும் Cricbuzz போன்ற அதன் பிற முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விரிவாக்கம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “அந்நிறுவனம், வெளிநாட்டு சந்தைகளுக்காக புதிய கேமிங் வடிவங்களை (new game formats) ஆராயும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இது, மொபைல் ப்ரீமியர் லீக் (Mobile Premier League – MPL) நிறுவனம் ஏற்றுக்கொண்ட தந்திரத்துக்கு (strategy) ஒத்ததாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.
RMG பிரிவு மூடப்படும் திட்டம், அந்த நிறுவனத்திற்கு ஒரு பெரிய அடியாகும், ஏனெனில் அதன் வருவாயில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை பொதுவாக Dream11 இன் கட்டண போட்டிகளிலிருந்தே வருகின்றன. 2008 ஆம் ஆண்டு ஹர்ஷ் ஜெயின் மற்றும் பவித் ஷெத் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், 28 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களுடன் இந்தியாவில் விளையாட்டு சந்தையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
2024 நிதியாண்டில் நடந்த ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது, இந்த தளத்திலிருந்து மட்டும் நிறுவனம் ரூ.9,600 கோடிக்கு மேல் சம்பாதித்தது. ஃபேன்கோட் மற்றும் ட்ரீம்செட்கோ போன்ற நிறுவனங்களின் பங்களிப்பு இன்னும் குறிப்பிடத்தக்கதாக இல்லை. டிரீம் ஸ்போர்ட்ஸின் முக்கிய வணிகத்தில் தடை எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இது காட்டுகிறது. இதன் விளைவாக, கடுமையான செலவு குறைப்புகள் (severe cost-cutting measures) மேற்கொள்ளப்படும், அதில் பெருமளவிலான பணியாளர் நீக்கங்கள் இடம்பெறும் என்றும் இந்த வட்டாரம் மேலும் கூறியது.
இந்த மசோதா குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், இந்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து பேசும்போது, “சமூகத்தில் சீட்டு நிதி போன்ற தீய செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது அரசின் மற்றும் நாடாளுமன்றத்தின் பொறுப்பு. ஆன்லைன் பணம் விளையாட்டுகளால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன” என்று கூறினார். 45 கோடி பேர் இதற்கு பலியாகிவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நமது நடுத்தர குடும்பங்கள் கடினமாக சம்பாதித்த ரூ.20,000 கோடிக்கும் அதிகமான பணம் அழிக்கப்பட்டுள்ளது,” என்று வைஷ்ணவ் கூறினார். இந்த மசோதாவை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தவுடன், Dream11, MPL போன்ற நிறுவனங்கள், வீரர்கள் பணத்தை இழக்கும் வாய்ப்புள்ள விளையாட்டுகளுக்கு பயனர்களிடமிருந்து வைப்புத்தொகையைப் பெறுவதைத் தடைசெய்யும். அமைச்சர் வைஷ்ணவ் கூறுகையில், இந்தச் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும், இதற்குத் தொழில்துறையுடன் நீண்ட ஆலோசனைகள் தேவையில்லை என்றும் தெரிவித்தார். காரணம், இது ஒரு ஒழுங்குமுறை சட்டம் அல்ல, மாறாக ஒரு முழுமையான தடைச் சட்டம். இந்தச் சட்டம், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தயம் என அழைக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டவிரோதமாக்குகிறது. இதில் ஆன்லைன் ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ், போக்கர், ரம்மி போன்ற கார்டு விளையாட்டுகள் மற்றும் ஆன்லைன் லாட்டரிகள் ஆகியவை அடங்கும்.
இந்த மசோதா, பல்வேறு குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கிறது: ஆன்லைன் பணம் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். பணம் விளையாட்டுகளுக்கு நிதி பரிவர்த்தனைகளை எளிதாக்கினால், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம்.
Readmore: உஷார்!. இந்திய பாம்பு இனங்களால் இறந்த பிறகும் விஷத்தை செலுத்த முடியுமாம்!. புதிய ஆய்வில் தகவல்!