இவர்களிடம் இருந்து முதலில் விஜய்யை காப்பாற்ற வேண்டும்.. தாடி பாலாஜியின் புதிய பதிவால் சர்ச்சை!

balaji 1

தவெகவின் 2வது மாநில மாநாடு நேற்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர்.. எனினும் விஜய்யின் ரேம்ப் வாக்கை பார்த்த பின்னர் பலர் கூட்டம் கூட்டமாக கலைந்து சென்றனர்.. இந்த மாநாட்டில் பேசிய விஜய், திமுக, பாஜகவை கடுமையாக சாடினார்..


சினிமாக்காரன் என்று முன்வைக்கப்படும் விமர்சனத்திற்கும் விஜய் பதிலளித்தார்.. மேலும் சினிமாவில் வருவது பல அடுக்குமொழி வசனங்களையும் பேசினார்.. பாஜக தான் கொள்கை எதிரி எனவும், திமுக தான் அரசியல் எதிரி எனவும், பாஜகவின் அடிமைக் கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் இல்லை என்றும் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்..

திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்திருப்பதாகவும், பெண்கள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை எனவும், வரும் 2026 தேர்தலில் மக்கள் விரோத கபட நாடக திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது உறுதி என்றும் கூறினார்.. மோடி அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதிமுக பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி என்றும் அப்பாவி தொண்டர்கள் வேதனையில் தவிக்கின்றனர் என்றும் விஜய் கூறினார்..

இந்த நிலையில், விஜய்யுடன் இருப்பவர்களிடம் இருந்து முதலில் அவரை காப்பாற்ற வேண்டும் என்று தாடி பாலாஜி பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ தமிழகத்தை காக்க வந்த தலைவா! முதலில் உங்களுடன் இருப்பர்வர்களிடம் இருந்து உங்களை காப்பாற்ற வேண்டும்.. இப்படிக்கு நண்பன்.. என்று பதிவிட்டுள்ளார்.. தவெக மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் தாடி பாலாஜியின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது..

இதுகுறித்து பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் “ விஜய் சார் முதல் மாநாட்டில் பேசியது பயங்கர பவராக இருந்தது.. ஆனால் மதுரை மாநாட்டில் விஜய்யின் பேச்சு எனக்கு திருப்தி அளிக்க வில்லை.. விஜய் கூட இருப்பவர்களிடம் இருந்து அவரை முதலில் காப்பாற்ற வேண்டும்.. விஜய் கட்சி தொடங்கிய நிலையில், அவருக்கு நிறைய பிரச்சனை இருக்கிறது.. விஜய்யை சந்தித்து எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. விஜய்யை சந்திக்க முயற்சி செய்தேன்.. ஆனால் பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.. அவரை பார்க்கும் போது நேரடியாக அவரிடம் பேசுவேன்..

கவின் ஆணவக் கொலை வழக்கு, அஜித் கொலை வழக்கு பற்றி விஜய் பேசியிருக்க வேண்டும்.. ராகுல் காந்தி கூறிய வாக்கு திருட்டு குறித்து ஏன் விஜய் பேசவில்லை..? தவெகவின் தேர்தல் வியூகம் என்ன? எப்படி பிரச்சாரம் செய்யப் போகிறோம்? தவெக கொள்கைகளை எப்படி சேர்க்கப் போகிறோம் என்பது பற்றி தலைவர் பேசியிருக்க வேண்டும்.. நேற்று விஜய் ரேம்ப் வாக்கை முடித்த உடனே கூட்டம் கலைந்துவிட்டது.. தலைவர் பேசுவதை கேட்க வேண்டும் என்ற எண்ணம் தொண்டர்களுக்கு இல்லை.. விஜய்யை பார்த்தால் அவ்வளவு தான் என்ற மனநிலையில் உள்ளனர்.. அவர்கள் இன்னும் ரசிகர் மனநிலையிலேயே உள்ளனர்..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

தெரு நாய்களை காப்பகங்களை அடைப்பதற்கு தடை.. அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க வேண்டும்.. உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..!

Fri Aug 22 , 2025
டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.. டெல்லியில் சுற்றித்திரியும் அனைத்து தெரு நாய்களையும் 8 வாரங்களுக்குள் பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டது. தெரு நாய் கடி சம்பவங்களை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.. தெருநாய்களை பிடிக்க அதிகாரிகளுக்கு தடையாக இருந்தால், சம்பந்தப்பட்ட நபர் […]
dogs supreme court

You May Like