உடல் எடையை குறைக்கும் பயணம் சவாலானதாக இருந்தாலும், சரியான வழிமுறைகளை பின்பற்றும் போது அது சாத்தியமான ஒன்றாக மாறும். உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் சில விஷயங்களை தவிர்த்தால், இவையெல்லாம் எடை குறைப்பு முயற்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்களை கொண்ட ஃபிட்னஸ் கோச் லெஸ்ஸி கூறுகையில், “28 நாட்களில் 7 பழக்கங்களை கையாள்வதன் மூலம் உடல் பருமனை கட்டுப்படுத்த முடியும்” என்கிறார். அவரது பரிந்துரைகள் சுலபமாகச் செய்வதற்கானவை என்பதால், பலராலும் பின்பற்றக்கூடியதாக இருக்கின்றன.
இனிப்பு மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் உடலுக்கு எதிரி. NIH ஆய்வுகளின்படி, இவைகள் உடல் பருமனை தூண்டுவதோடு, வளர்சிதை மாற்ற செயல்முறையையும் பாதிக்கக்கூடியவை. ‘டயட்’ என அழைக்கப்படும் கலோரி குறைவான பானங்கள்கூட பசியை தூண்டும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதற்குப் பதிலாக வெதுவெதுப்பான நீர், மூலிகை டீ போன்ற இயற்கை பானங்களை தேர்வு செய்யலாம்.
சர்க்கரை உட்கொள்ளலை 30 நாட்கள் முழுவதும் தவிர்ப்பதால், முகம் பளிச்சென்று மாறுவதோடு, உடல் எடையும் குறையக்கூடியதாக இருக்கும். சர்க்கரை, கொழுப்பு சேர்வையை ஊக்குவிக்கும் என்பதுடன், சருமத்திற்கு தேவையான கோலாஜனின் உற்பத்தியையும் தடுக்கிறது. இனிப்புக்காக தவிக்கும்போது பழங்களை தேர்வு செய்வது சிறந்ததாகும்.
ஒரு நாளில் ஒரு கப் காஃபி குடிக்கலாம். ஆனால், அதிகமாகக் காபி குடித்தால், தூக்கத்தை பாதித்து, உடலில் கார்டிசோல் (மன அழுத்த ஹார்மோன்) அதிகரித்து, உடல் எடையை ஏற்றுவிக்கும். 28 நாட்கள் காஃபினை தவிர்ப்பதன் மூலம் அட்ரீனல் சோர்வை சமாளிக்க முடியும்.
உடல் பராமரிப்பில் தூக்கம் ஒரு மறைக்கப்பட்ட நாயகன். NHANES ஆய்வின் படி, போதிய தூக்கமில்லாதவர்கள் மத்தியில் உடல் பருமன் விகிதம் அதிகம். இரவு 10 மணிக்கு முன் தூங்குவதால், ஹார்மோன் சமநிலையும், வளர்சிதை மாற்றமும் சீராக இருக்கும். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என லெஸ்ஸி வலியுறுத்துகிறார்.
தினசரி 10 நிமிடங்கள் தியானம் செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். மன அமைதியின்றி இருப்பவர்கள் உணவை உணர்ச்சிப்பூர்வமாக உண்ணும் அபாயத்தில் இருப்பது தெரிந்த உண்மை. கவனத்தை திரட்டி, சாப்பாட்டில் கட்டுப்பாடு கொண்டு வர தியானம் உதவும்.
தண்ணீர். ஒரு நாளில் குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை சுறுசுறுப்பாக்கும். பசியைக் குறைத்து, நச்சு சேர்க்கைகளைக் களைந்து, செரிமானத்தை மேம்படுத்துவதில் இது ஆற்றும் பங்கு வலுவானது” என்று தெரிவித்துள்ளார்.
Read More : “கூடவே பழகிட்டு துரோகம் பண்ணிட்டியே”..!! நண்பன் மனைவியுடன் உல்லாசம்..!! ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்..!!