இன்றைய டிஜிட்டல் உலகம் ஒருபக்கம் அறிவும், தொழிலும், வருமானமும் தரும் ஒரு தளமாக இருந்தாலும், அதை சிலர் தவறாக பயன்படுத்தி, ஆடம்பர வாழ்க்கைக்கு உதவும் கருவியாக மாற்றியுள்ளனர். இணையத்தில் “பலூன் அக்கா” என அழைக்கப்படும் Aurora Sinclair என்ற இளம்பெண் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
சமூக வலைதளங்களில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய பிறகு, அதையே பணமாக்கும் நோக்கத்தில், “சப்ஸ்கிரைப் செய்தால் மாதத்திற்கு ரூ.390” என விளம்பரப்படுத்தி, “வீடியோ கால் சர்வீஸ்” வழங்க ஆரம்பித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிரக்கணக்கான பேர் இதுவரை சப்ஸ்கிரைப் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில், அவர் ஒரு மாதத்தில் ரூ.5,49,510 வருமானம் ஈட்டுகிறார் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சப்ஸ்கிரைப் சேவை, வீடியோ காலிங், ஓபன் விளம்பரங்கள் இவை அனைத்தும் இப்போது ஒரு டிரெண்ட் ஆகவே உருவெடுத்துள்ளது. இதைப் பின்பற்றும் சில முன்னாள் நடிகைகளும், இன்ப்ளூயன்சர்களும், சமூக வலைதளங்களில் அடிக்கடி தெரிய வருகிறார்கள்.
மேலும், “இதுக்கே ஆச்சர்யப்பட வேண்டாம்” என்கிறார்கள் சில நெட்டிசன்கள். “இந்தியில் சில இன்ப்ளூயன்சர்கள் மாதத்திற்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இப்படி சம்பாதிக்கிறார்கள். இது ஒரு சிறிய அளவுதான்” என்கின்றனர். பிரபலமாகும் தாகம் சிலரை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும். அதே சமயம், அதை ஆதரிக்க சில பார்வையாளர்கள் உலகமும் தயாராகவே உள்ளது என்பதை இச்சம்பவம் காட்டுக்கிறது.