விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிச்சேவல் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை வருவாய் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.. அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் வசதிகள், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று முறையிட்டனர்.. மேலும் பெண்கள் சிலர் மகளிர் உரிமைத்தொகை குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்..
அவர்களிடம் உரிய மனு மனு அளிக்குமாறும் விரைவில் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.. அப்போது அங்கிருந்த பெண் ஒருவரிடம் “ இப்படி, காது காது, மூக்கு, கழுத்தில் நகை அணிந்து வந்தால் எப்படி மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்? என்று அமைச்சர் நகைச்சுவையாக கேட்டார்..
அங்கே இருந்த பொதுமக்கள் அனைவரும் நகைச்சுவை உடன் சிரித்தனர்.. மேலும் நகைகள் கணக்கில் வந்தால் மகளிர் உரிமைத் தொகையானது தரப்பட மாடாது என அமைச்சர் தெரிவித்தார். இதை எல்லாம் கழற்றி வைத்துவிட்டு வந்தால் உரிமைத் தொகை கிடைக்குமா? என்று பெண்களும் கேள்வி எழுப்பினர்.. இதனால் அந்த பகுதியில் சிரிப்பலை எழுந்தது..