பெட்ரோல் 2 லிட்டர் வாங்கினால் 2 லிட்டர் இலவசம்…! எங்க தெரியுமா…?

petrol pumps 1 1

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி என்ற இடத்தில் புதிதாக பெட்ரோல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவை ஒட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால் 2 லிட்டர் இலவசம் என்றும், 5 லிட்டர் வாங்கினால் 2.5 லிட்டர் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டது.


இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால், இலவசமாக பெட்ரோல் மற்றும் டீசல் பெறுவதற்காக ஏராளமான வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையத்திற்கு விரைந்தனர். இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் என அனைத்து விதமான வாகனங்களும் பெட்ரோல் நிலையம் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றதால், அவ்வழியாக சென்ற மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இது போன்ற இலவசங்களை அறிவிக்கும் முன்னர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என வாகன ஓட்டுகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Vignesh

Next Post

வேளாங்கண்ணிக்கு 1,050 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு...! ஆன்லைன் மூலம் முன்பதிவு தொடக்கம்...!

Sat Aug 23 , 2025
சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஆண்டுதோறும் வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா கோயில் திருவிழாவை யொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த […]
bus 2025 5

You May Like