இறந்த பிறகு கால் விரல்கள் ஏன் கட்டப்படுகின்றன?. அப்படி கட்டவில்லையென்றால் என்ன நடக்கும்?.

Dead Body 11zon

துக்க நிகழ்ச்சி நடைபெற்ற வீடுகளில் நாம் இதனை பார்த்திருப்போம். இறந்தவரின் கால் கட்டை விரல்களை கட்டுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், ஏன் கால் கட்டை விரல்களை கட்ட வேண்டும்? மரணம் நிகழ்ந்த பிறகு கூட பிராணசக்தி உடலை விட்டு முழுவதும் அகன்று விடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றி, ஓர் உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. எனவே, தான் இறந்து போனவர்களின் உடல் வடக்கு தெற்காக வைக்கப்படுகின்றன. உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும் போதுஅந்த உடலில் சிலமாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச் சுற்றிக் கொண்டு இருக்கும் பிராணசக்தி உடலை விட்டு முழுவதும் அகன்று விடுகிறது.


மற்ற சூழ்நிலைகளில் உயிரானது தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒரு விதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்து போன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல.
அதேபோல், மரணம் நிகழ்கிற போது கால்கள் அகலமாகத் திறந்து கொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத்துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன பிராணசக்தியானது அந்தமூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உடலுக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.

எனவே, கால்கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக்கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால் கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும் போது பின்புறத்துவாரம் இயல்பாகவே மூடிக் கொள்ளும். இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் (பிராணசக்தி) முயற்சி இப்போது பலிக்காது.

மூலாதாரம் திறந்திருக்கிற போது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில சக்திகளும் முயலக் கூடும். அது எதிர்மறையான காந்த அலைகளை உருவாக்கும். மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும். அப்படி அந்த உடல்வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாகஇருக்கும். எனவே தான் இறந்த பின்னர், கால் கட்டை விரல்களை கட்டுகின்றனர்.

Readmore: பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு…! தமிழக அரசு நடத்தும் 3 நாள் மேக்கப் மாஸ்டர் கிளாஸ் பயிற்சி…!

KOKILA

Next Post

ஆச்சரியம்!. தக்காளியில் இருந்து உருளைக்கிழங்கு பிறந்ததா?. 90 லட்சம் ஆண்டுகள் பழமையான ரகசியத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

Sat Aug 23 , 2025
உருளைக்கிழங்கின் வேர்கள் தக்காளி மற்றும் எட்டுபெரோசம் என்ற காட்டு தாவரத்துடன் தொடர்புடையவை என்று விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். உருளைக்கிழங்கு சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அவற்றின் கலப்பினத்திலிருந்து உருவாக்கப்பட்டது. இது தக்காளியிலிருந்து SP6A மரபணுவையும், எட்டுபெரோசம் இலிருந்து IT1 மரபணுவையும் பெற்றது. நாம் அனைவரும் அடிக்கடி உருளைக்கிழங்கையும் தக்காளியையும் ஒன்றாகச் சாப்பிடுகிறோம். சில சமயங்களில் சாட்டிலும், சில சமயங்களில் பரோட்டாக்களிலும் சாஸ்களிலும் சாப்பிடுகிறோம். ஆனால் உருளைக்கிழங்கிற்கும் தக்காளிக்கும் இடையிலான உறவு […]
tomato potato 11zon

You May Like