fbpx

“சார் என்ன ஒன்னும் பண்ணாதீங்க” கெஞ்சிய மாணவி; போதையில் சில்மிஷம் செய்த போலீசார்..

திருச்சி காக்கிகள்!திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயதான உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, உஷா தனது ஆண் நண்பருடன் முக்கொம்பு பகுதிக்கு சுற்றிப் பார்க்க சென்றுள்ளார். அப்போது, திருச்சி திருவெறும்பூர் காவல் தனிப்படையைச் சேர்ந்த பயிற்சி எஸ்.ஐ சசிக்குமார், காவலர்கள் பிரசாத், சித்தார்த்தன், சங்கர் ராஜபாண்டி ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில், காதலர்கள் இருவரும் தனியாக இருந்தததை பார்த்த போலீசார், அவர்களை மிரட்டி உள்ளனர்.

மேலும், உஷாவை பாலியல் ரீதியாக சீன்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காதலர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். மேலும், உஷா தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து திருச்சி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட போலீசாரிடம் தீவிர விசரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், இளம்பெண் அளித்த புகார் உண்மை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவலர்கள் 4 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருச்சி போலீசார் கைது செய்தனர். பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசாரே இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Maha

Next Post

தமிழ்நாட்டில் தீவிரமடையும் டெங்கு..!! மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம்..!! பள்ளிகளுக்கு விடுமுறையா..?

Fri Oct 6 , 2023
தமிழ்நாட்டில் அடிக்கடி பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாகி வருகிறது. அரசு டெங்கு பாதிப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது தமிழ்நாட்டில் புதிதாக தினமும் 35 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். டெங்கு பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வீடுகளை […]

You May Like