நீட் தேர்வில் எடுத்தது 30 மதிப்பெண்.. ஆனா 84%.. மோசடி செய்து மருத்துவ படிப்பில் சேர முயன்ற மாணவி..!! சிக்கியது எப்படி..? 

doctor arrest

2025-ம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் தொகுதி முதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவி, போலியான ஆவணங்கள் சமர்ப்பித்ததற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


அவரது பெயர், அந்த எய்ம்சுக்காக தேர்வான 100 பேர் பட்டியலில் இல்லை. AIIMS நிர்வாகம் தெரிவித்ததாவது, லக்கிசராய் பகுதியில் வசிக்கும் அந்தப் பெண், கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் போது தனது NEET UG 2025 மதிப்பெண்கள் 30 மட்டுமே இருந்தபோதிலும், 590 மதிப்பெண்கள் மற்றும் 84 சதவீத மதிப்பெண்கள் கொண்டதாக போலியான மதிப்பெண் அட்டையும், தரவரிசை கடிதமும், தற்காலிக ஒதுக்கீடு கடிதமும் தயாரித்து சமர்ப்பித்தார்.

கவுன்சிலிங்கின் போது மாணவி தனது உள்நுழைவு ஐடியை கொடுத்தாலும், கடவுச்சொல் செயல்படவில்லை என்ற காரணத்தை கூறி தாமதம் செய்தார். பின்னர், மொபைல் ஸ்கிரீன்ஷாட்டில் போலியான மதிப்பெண்களை காட்ட முயன்றார். மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) உடனடியாக NEET UG 2025 அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மாணவியின் மதிப்பெண்களை சரிபார்த்தது. உண்மையில் மாணவிக்கு 30 மதிப்பெண்கள் மட்டுமே இருந்தது உறுதி செய்யப்பட்டது.

AIIMS நிர்வாகம் உடனடியாக பிலாஸ்பூர் சதார் காவல் நிலையத்தில் புகார் அளித்து, மாணவியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆரம்ப விசாரணையில், மாணவி மதிப்பெண் அட்டை மற்றும் தற்காலிக ஒதுக்கீடு கடிதத்தை திருடியதாகவும் ஒப்புக்கொண்டார். பிலாஸ்பூர் டிஎஸ்பி மதன் திமான் தலைமையில் போலீசார் முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். வேறு யாருக்கெனும் இதில் தொடர்பு உள்ளதா என விசாரிக்கப்பட்டு வருகிறது.

Read more: “ஒரு நாள் மழைக்கே ஓர் அப்பாவி உயிர் பலி.. டிசம்பரில் தலைநகரின் கதி என்ன?முதல்வர் உடனே இதை செய்ய வேண்டும்..” நயினார் நாகேந்திரன் சாடல்..

English Summary

Candidate Shows Fake Documents During Counselling For MBBS In AIIMS Bilaspur

Next Post

ரூ. 64 லட்சத்தை அள்ளலாம்.. பெண் குழந்தைகளுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்..!! உடனே சேருங்க..

Sat Aug 23 , 2025
Sukanya Samriddhi Yojana: If you save Rs. 12500 per month in the name of a woman, you will get Rs. 64 lakhs.
savings

You May Like