fbpx

இன்னும் 10 நாட்களில்..!! தனித்து போட்டியிடும் பாஜக..!! அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு..!!

டெல்லியில் தேசிய தலைவர்கள் உடனான சந்திப்பிக்குப்பின் சென்னையில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்தும், கூட்டணியின் முறிவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர்கள் தனித்து போட்டியிடுவது பாஜகவுக்கு புதிதல்ல என்றே கூறினர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்காக 39 தொகுதிகளிலும் அடுத்த 10 நாட்களுக்குள் பொறுப்பாளர்களை நியமிக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார். இதற்காக பட்டியல் தேர்வு செய்யப்பட்ட பிறகு, தேசிய தலைமைக்கு நேரடியாக அனுப்பவும் திட்டமிட்டுள்ளார். எந்த குற்றப்பின்னணியும் இல்லாதவர்களை பொறுப்பாளர்களாக நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்திருக்கிறது.

பொறுப்பாளர்களை மாநில அளவிலான நிர்வாகிகள் தேர்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்ற அண்ணாமலையின் விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Chella

Next Post

திடீரென படத்தில் இருந்து நயன்தாராவை நீக்கிய லோகேஷ்..? காரணம் இதுதான்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Sat Oct 7 , 2023
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் இருந்து நயன்தாரா நீக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அடுத்ததாக, ரஜினிகாந்தின் 171-வது படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ். இயக்கம் மட்டுமல்லாது, தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரக்கூடிய அவர், ரத்னகுமார் இயக்கும் படத்தைத் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாகவும், நயன்தாரா […]

You May Like