சமீப காலங்களில் ஏர் ஃப்ரையர் (Air fryer) எனப்படும் சமையல் சாதனம் பலரது இல்லங்களின் அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டன. எண்ணெய் இல்லாமல் மொறுமொறுப்பான உணவுகளைச் சமைக்கலாம் என்பதே இந்த சாதனத்தின் ஈர்ப்பு. கோல்டன் ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் முதல் பிரோஸ்டட் சிக்கன் வரை, ஒரு துளி எண்ணெய் கூட இல்லாமல் சமைக்கலாம் என்பதே இதன் சிறப்பு.
இதுதொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இரைப்பை மற்றும் குடல் நிபுணரான டாக்டர் சௌரப் சேத்தி கூறுகையில், “ஏர் ஃப்ரையர் உபயோகப்படுத்துகிறீர்கள் என்பதாலேயே நீங்கள் சமைக்கும் உணவு ஆரோக்கியமானது என்று அர்த்தமல்ல. நீங்கள் அதில் என்ன சமைக்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உள்ளது.
எண்ணெய் இல்லாத சமையல் ஆரோக்கியமானதாகத் தோன்றினாலும், அதில் உள்ள உணவுப் பொருட்கள் மிக முக்கியம். அதிகமாக மாற்றம் செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட frozen உணவுகள் மற்றும் குறைவான தரமுள்ள ரீஃபைன்ட் ஆயில்கள் இவை ஏர் ஃப்ரையருடன் சேரும்போது ஆரோக்கியம் தருவதில்லை. உணவின் தன்மை மாற்றப்படாமல் இருந்தால், வேகும் முறையால் மட்டும் அது சத்துள்ளதாக மாறுவதில்லை.
அதற்கேற்ப, சிறிதளவு அவகேடோ ஆயில் அல்லது நெய் உபயோகிப்பது வைட்டமின் A, D, E மற்றும் K ஆகியவை உடலில் சரியாக உறிஞ்சப்பட உதவுகிறது. இதே நேரத்தில், ரீஃபைன்ட் சீட் ஆயில்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடலில் தீங்கான இன்ப்ளமேஷனை தூண்டும் என்பது மருத்துவ ரீதியான ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டது.
ஏர் ஃப்ரையரில் காய்கறிகள், குறிப்பாக இலைகள் அல்லது ப்ரோக்கோலி போன்றவை, அதிக வெப்பம் அல்லது நேரத்துக்கு அமைய எளிதில் எரிந்து விடக்கூடும். எனவே, அவற்றை லேசான எண்ணெய் தடவிய பச்சைமையில்லாத parchment பேப்பர் அல்லது சிலிகான் லைனர் மீது வைத்து சமைப்பது சிறந்தது.
ஏர் ஃப்ரையர் பயன்படுத்தும்போது பாதுகாப்பான லைனர்களைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். BPA இல்லாத, FDA அங்கீகாரம் பெற்ற, 480°F வெப்பத்தை தாங்கக்கூடிய உணவு தர சிலிகான் அல்லது குளோரின் இல்லாத parchment பேப்பர் ஆகியவை சிறந்த தேர்வுகள் ஆகும். இது உணவின் பாதுகாப்பையும், நம்முடைய உடலின் நலத்தையும் உறுதி செய்கின்றன.
மேலும், சில ஏர் ஃப்ரையர்களில் இருக்கும் டெஃப்ளான் (PTFE) பேஸ்கெட்கள் அதிக வெப்பத்தில் சிதைந்து ஹார்ம் செய்யக்கூடிய தன்மை கொண்டவை. எனவே, செராமிக் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிணையங்களைக் கொண்ட ஏர் ஃப்ரையர்களைத் தேர்வு செய்ய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.