அதிமுக கூட்டணியில் இணைந்த ஜான் பாண்டியன்.. எந்த தொகுதியில் போட்டி?

john pandiyan

2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சி தலைவர்களின் சுற்றுப்பயணங்கள், வீடு தோறும் திண்ணை பிரச்சாரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், பொது கூட்டங்கள் என்று இப்போதே தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு என்று வியூகம் வகுத்து களத்தில் இறங்கிவிட்டனர்.


திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.

தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் பாமக, தேமுதிக, ஓபிஎஸ் உள்ளிட்டோர் எடுக்கப் போகும் முடிவுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்படியான சூழலில் அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து விட்டதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

2026 தேர்தல் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் திண்டுக்கலில்லில் நேற்று இரவு ஜான் பாண்டியனின் தமமுக சார்பில் சமூக சமத்துவ மாநாடு நடந்தது. இதில் அதிமுக மூத்த தலைவர்கள், நயினார் நாகேந்திரன், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் திமுகவை விமர்சித்த ஜான் பாண்டியன், அதிமுக கூட்டணியில் தமமுக இருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார். மேலும் 2026ல் தென் மாவட்டத்தில் போட்டியிடுவதாகவும் அறிவித்தார்.

Read more: வங்கிகளில் லோன் வாங்குவோருக்கு செம குட் நியூஸ்..!! இனி சிபில் ஸ்கோர் கிடையாது..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

English Summary

John Pandian has joined the AIADMK alliance.. in which constituency will he contest?

Next Post

“வேலையை இழந்த கணவரை அவமானப்படுத்திய மனைவி”..!! நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு..!!

Mon Aug 25 , 2025
திருமணத்திற்கு பிறகு வேலையை இழந்த கணவனை, தொடர்ந்து கேலி செய்து வந்த மனைவியின் செயல்பாடு, மன ஒடுக்குமுறையாகக் கருதப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குரூத் பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியின் முதல்வராக பணியாற்றும் மனைவி, வழக்கறிஞராக இருந்த தனது கணவனின் வேலை இழப்பை அவமானப்படுத்தியதுடன், நிதிச்சுமையை காரணமாக்கி தேவையற்ற பணம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார். மனைவியின் இந்த மாறுபாடுகள் அவரது மனநிலையை பெரிதும் பாதித்ததாகக் கூறி, கணவர், விவகாரத்து கோரி […]
divorce1

You May Like