தெற்கு ரயில்வே பணிமனைகளில், ஓராண்டு காலம் அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள விதிகளின் அடிப்படையில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.
காலிப்பணியிட விவரம்: தெற்கு ரயில்வேயில் மொத்தம் 3,518 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை:
- பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் (Chennai) – 1,394 இடங்கள்
- திருச்சி கோல்டன் ராக் மத்திய பணிமனை – 857 இடங்கள்
- போத்தனூர் சிக்னல் மற்றும் டெலிகாம் பணிமனை (Coimbatore) – 1,267 இடங்கள்
வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி: இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 15 முதல் 24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு அல்லது ITI துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனினும், அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு அல்லது ITI துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது? www.sr.indianrailways.gov.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, அரசு நிர்ணயித்துள்ள ஊதிய விதிகளின் அடிப்படையில் உதவித்தொகையுடன் ஓராண்டு அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் – ரூ.100 (ஆன்லைன் வழி).
SC, ST, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 25, 2025.