உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் கக்வான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில், 14 வயதுடைய தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல், பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் ஆகஸ்ட் 20ஆம் தேதி இரவு நடைபெற்றுள்ளது. வீட்டில் கழிப்பறை இல்லாததால், அவசரத் தேவைக்காக வயலுக்குச் சென்ற சிறுமியை, அங்கு பதுங்கி இருந்த 4 பேரும் வழிமறித்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கிடையே, சிறுமி வீட்டிற்கு நீண்ட நேரம் திரும்பாததால், குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், சுமார் 500 மீட்டர் தொலைவில் இரத்த வெள்ளத்தில் சிறுமி மயக்க நிலையில் கிடந்தார். பின்னர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ரவீந்திர யாதவ், அருண் மற்றும் இக்கு யாதவ் ஆகிய 4 பேரும் தன்னை வயலுக்குள் இழுத்துச் சென்று, ஆடைகளை கிழித்து வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : 68 கிலோவில் இருந்து 55 கிலோ..!! 45 நாட்களில் உடல் எடையை சட்டென குறைத்த சுனிதா..!! அவரே சொன்ன டிப்ஸ்..!!