Royal Enfield: ராயல் என்ஃபீல்ட் கொரில்லா 450.. புதிய நிறத்தில் அறிமுகம்..! விலை என்ன..?

rayol enfiled

இந்தியாவின் முன்னணி மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பிரபலமான கெரில்லா 450 மாடலை புதிய நிற ஆப்ஷனுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. “ஷேடோ ஆஷ்” என அழைக்கப்படும் இந்த புதிய டூயல்-டோன் நிறம் புனேவில் தபஸ்வி ரேசிங்குடன் இணைந்து நடத்தப்பட்ட GRRR நைட்ஸ் X அண்டர்கிரவுண்ட் நிகழ்வில் வெளியிடப்பட்டது.


புதிய நிறத்தில் அறிமுகமான கெரில்லா 450 மாடலின் விலை ரூ. 2.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள கெரில்லா 450 மாடல்களின் ஆரம்ப விலை ரூ. 2.39 லட்சம் ஆகும். புதிய “ஷேடோ ஆஷ்” நிறத்தில், பைக்கிற்கு ஆலிவ் கிரீன் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. அதனை கருப்பு நிற டீ-டெயிலிங் சிறப்பாக அலங்கரிக்கிறது. இதைத் தவிர, கெரில்லா 450 மாடல் ஏற்கனவே பிராவா புளூ, எல்லோ ரிப்பன், கோல்ட் டிப், பிளேயா பிளாக், பீக்ஸ் ப்ரான்ஸ், ஸ்மோக் சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

இந்த பைக்கில் ஹிமாலயன் மாடலில் பயன்படுத்தப்பட்ட அதே லிக்விட்-கூல்டு 452 சிசி ‘ஷெர்பா 450’ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்ச பவர் – 40 ஹெச்பி @ 8,000 RPM. அதிகபட்ச டார்க் – 40 Nm @ 5,500 RPM.இதன் மூலம் நீண்ட தூர பயணத்திற்கும் ஆஃப்-ரோடு ஓட்டத்திற்கும் சிறந்த திறன் வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கெரில்லா 450-இல் 43 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புற சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் வசதிகளில், முன்புறத்தில் – 310 மிமீ வென்டிலேட்டெட் டிஸ்க், பின்புறத்தில் – 270 மிமீ சிங்கிள் டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பை மேம்படுத்த டூயல் சேனல் ABS வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

Read more: சமையல் அறையில் குப்பை தொட்டி இருக்கா..? வாஸ்துபடி இந்த தவற மட்டும் செய்யாதீங்க..

English Summary

Royal Enfield: Royal Enfield Gorilla 450.. launched in a new color..! What is the price..?

Next Post

ரூ.500 முதலீடு செய்தால் ரூ.35,681 கிடைக்கும்.. உங்க குழந்தை பெயரில் உடனே இந்த அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்க..!!

Mon Aug 25 , 2025
If you invest Rs.500, you will get Rs.35,681.. Open this account in your child's name immediately..!!
post office scheme 1

You May Like