கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீன் நாட்டின் ஒவ்வொரு பகுதியாக கைப்பற்றி தற்போது காசாவையும் மேற்கு கரை பகுதியையும் கைப்பற்ற அந்நாட்டு மீது தொடர் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வந்தது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியை இஸ்ரேல் இழிவுபடுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதன் காரணமாக காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பின் படை நேற்று இஸ்ரேல் மீது 5,000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது.
மேலும், எல்லைக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவ வீரர்கள், தளபதிகளை கைது செய்துள்ளது. இப்படி பாலஸ்தீனிடம் சிக்கியவர்தான் நிர்மோத் அலோனி. இவர், கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் வரை காசாவின் கட்டுப்பாட்டு பிரிவு பிரிகேடியராக இருந்தார். தற்போது இஸ்ரேலின் தலைசிறந்த வீரர்களை கொண்ட ISF எனப்படும் இஸ்ரேல் சிறப்பு படையின் “Depth Crops” எனப்படும் எதிரிகளை ஆழ ஊடுறுவும் படை அணியின் கட்டளைத் தளபதியாக இருக்கிறார்.
இஸ்ரேலுக்கு எதிராக திட்டம் தீட்டும் நபர்கள், அமைப்புகளை கண்டறிந்து சொல்லும் உலகின் தலைசிறந்த உளவு அமைப்பு என்று அழைக்கப்படும் மொசாத்திடம் இருந்து தகவல்களை பெற்று, அவர்களை கைது செய்வது, கொல்வது போன்றவைதான் இவருக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் பணி. இதுவரை பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதல் பலவற்றை இவரே வழி நடத்தியுள்ளார்.
இந்நிலையில் தான், இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்த ஹமாஸ் படையினர் நிர்மோத் அலோனியை கைது செய்து பாலஸ்தீனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தங்களின் பாதுகாப்பு கவசம் என யாரை இஸ்ரேல் நம்பியதோ, அந்த பிரிவின் தலைவரையே ஹமாஸ் தூக்கியது அந்நாட்டை ஆட்டம் காண செய்துள்ளது. நிர்மோத் அலோனியிடம் இஸ்ரேலின் ரகசிய நடவடிக்கைகள், திட்டங்கள், ராணுவ ரகசியங்களை ஹமாஸ் மிரட்டி கேட்டுப் பெறும் முயற்சியில் ஈடுபடும் என்று கூறப்படுகிறது.