இந்தியாவின் முன்னணி ஃபான்டஸி விளையாட்டு தளமான Dream11-இன் தாய் நிறுவனமான Dream Sports, ஆன்லைன் கேமிங் தடையை தொடர்ந்து, புதிய தனிப்பட்ட நிதி செயலியான Dream Moneyயை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஃபான்டஸி விளையாட்டு தளமான Dream11-இன் தாய் நிறுவனமான Dream Sports, புதிய தனிப்பட்ட நிதி செயலி ஒன்றை Dream Money என்ற பெயரில் சோதனை செய்து வருகிறது என Moneycontrol வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டிரீம் மணி என்றால் என்ன? தங்கம் மற்றும் நிலையான வைப்புத்தொகைகளில் முதலீடு செய்வதன் மூலம் பயனர்கள் தங்கள் நிதிகளை நிர்வகிக்கவும், தினசரி செலவுகளைக் கண்காணிக்கவும் உதவும் வகையில் புதிய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்திய ஆன்லைன் கேமிங் துறையில் ஏற்பட்ட முக்கியமான ஒழுங்குமுறை மாற்றங்களுக்கு பிறகு, புதிய வருமான வாய்ப்புகளை தேடி வரும் Dream Sports நிறுவனத்துக்கு இது ஒரு முக்கியமான பிஸினஸ் மாற்றமாக அமைகிறது.
வெள்ளிக்கிழமை அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்ற புதிய கேமிங் தடை சட்டம், ஆன்லைனில் பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகளைத் தடை செய்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ், பயனர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணத்தை வைப்பு செய்யும் மற்றும் அந்த வைப்பில் இருந்து வெற்றி தொகை (winnings) பெறும் நம்பிக்கையில் விளையாடும் அனைத்து விளையாட்டுகளும் தடை செய்யப்படுகின்றன. இது போன்ற சட்ட மாற்றங்கள் இந்திய ஆன்லைன் கேமிங் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, Dream11 போன்ற நிறுவனங்களை புதிய துறைகளுக்கு மாற்றம் செய்ய தூண்டியுள்ளது. அதில் ஒன்று தான் இப்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள Dream Money போன்ற தனிப்பட்ட நிதி செயலிகள்.
இதற்கிடையில், டிஜிட்டல் தங்க வர்த்தக தளமான Augmont உடன் கூட்டு சேர்ந்துள்ள Dream Money, பயனர்கள் தங்கத்தை வாங்கவோ அல்லது ரூ.10 முதல் தினசரி அல்லது மாதாந்திர அடிப்படையில் SIP (முறையான முதலீட்டுத் திட்டம்) அமைக்கவோ அனுமதிக்கிறது. இது, சிறிய அளவில் முதலீடு செய்ய விரும்பும் பயனர்களுக்கு ஒரு எளிதான வாய்ப்பை வழங்குகிறது மற்றும் Dream Money செயலியை பரந்த மக்களுக்கு நிதி மேலாண்மை கருவியாக மாற்றும் நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
Moneycontrol வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, Dream Money செயலியில், ரூ.1,000 முதல் நிலையான வைப்புத் தொகை முதலீடுகளையும் செய்ய முடியும், முதலீடு செய்ய வங்கிக் கணக்கு அவசியமில்லை, முதலீட்டில் உள்ள பணத்தை எப்போது வேண்டுமானாலும் மீட்டெடுக்க (withdraw) முடியும். ஆன்லைன் கேமிங் சட்டத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து Dream11 பணம் செலுத்திய போட்டிகளில் இருந்து புத்திசாலித்தனமாக விலகி, அதன் புதிய செயலியை முறையாக அறிவித்துள்ளது.
Readmore: நவபஞ்சம யோகம்: பணத்தை கட்டு கட்டாக அள்ளப் போகும் 3 ராசிகள்.. தொட்டதெல்லாம் வெற்றி தான்!