அதிபர் டிரம்பிற்கு அரிய நோயா?. வலது கையில் காயத்துடன் வைரலாகும் புகைப்படம்!.

health concerns trump 11zon

டொனால்ட் டிரம்பின் வலது கையில் ஏற்பட்ட காயம் மீண்டும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, இதனால் அவரது உடல்நிலை மற்றும் காரணம் குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


திங்கள்கிழமை ஒவல் அலுவலகத்தில் (Oval Office) நடைபெற்ற நிகழ்வின் போது, டொனால்ட் டிரம்பின் வலது கையில் கருப்பு மற்றும் நீல நிறத்தில் காயம் தெளிவாகக் காணப்பட்டது. ரெசலூட் மேசையில் அமர்ந்திருந்த டிரம்ப், செய்தியாளர்களிடம் பேசும்போது தனது இடது கையை வலது கையின் மீது வைத்துக் கொண்டு, அந்தக் காயத்தை மறைக்க முயன்றது போல இருந்தது. இதேபோல், மற்றொரு பொது நிகழ்வின் போது, அவரின் கையில் பொருந்தாத மேக்கப் (mismatched makeup) ஒட்டியிருந்தது போல் தெரிந்ததற்கு சில நாட்களுக்குப் பிறகே நடந்துள்ளது.

அந்த நிகழ்வின் போது, கையில் இருந்த மேக்கப்பைப் பார்த்து, அவர் ஏதாவது மறைக்க முயற்சிக்கிறாரா? என்ற ஊகங்கள் மற்றும் பேச்சுகள் இடம்பெற்றன. தற்போதைய காயம் மற்றும் இதற்கு முந்தைய மேக்கப் சம்பவம், இரண்டும் சேர்ந்து, அமெரிக்க அரசியல் வட்டாரங்களிலும் சமூக ஊடகங்களிலும், அவரின் உடல்நிலை அல்லது செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பும் அளவுக்கு கவனத்தை ஈர்த்துள்ளன.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்ட், டொனால்ட் டிரம்பின் கையில் காணப்பட்ட காயம் அல்லது மேக்கப் குறித்து எழுந்த ஊகங்களைப் பற்றி எந்தவொரு முக்கியமான விளக்கத்தையும் அளிக்காமல், இது கவலைக்குரிய விஷயமல்ல எனக் கூறினார். “ஜனநாயகத்தின் மனிதராக அதிபர் டிரம்ப் இருக்கிறார். வரலாற்றில் ஏற்கனவே இருந்த எந்த ஜனாதிபதியையும் விட அவர் தினசரி அதிகமான அமெரிக்கர்களை சந்தித்து, அவர்களுடன் கைகுலுக்குகிறார். அவரது அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது, அதை அவர் ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருகிறார்,” என்று கரோலின் லீவிட்ட் தெரிவித்தார்.

ஜூலை மாதத்தில் டொனால்ட் டிரம்பின் கையில் காணப்பட்ட காயம் குறித்து எழுந்த கேள்விகளைத் தொடர்பாக, வெள்ளை மாளிகை தற்போது ஒரு அதிகாரப்பூர்வக் குறிப்பு வெளியிட்டுள்ளது. இந்தக் குறிப்பை ஜனாதிபதி டிரம்பின் தனியார் மருத்துவர் டாக்டர் ஷான் பார்பபெல்லா (Dr. Sean Barbabella) வெளியிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “தினசரி பலருடன் கைகுலுக்குவதாலும், இதய நோய் தடுப்பு நடவடிக்கையாக வழக்கமாக எடுத்துக் கொள்ளப்படும் ‘அஸ்பிரின்’ மாத்திரையின் பயன்பாடாலும் ஏற்படும் சிறிய திசு எரிச்சல் (minor soft tissue irritation) காரணமாக ஏற்பட்டவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவர் மேலும் உறுதி செய்ததாவது, டொனால்ட் டிரம்ப் “நீடித்த தமனிச் சுரக்குறைபாடு” (Chronic Venous Insufficiency) எனும் நிலைக்கு உட்பட்டவர் எனத் தெரிவித்துள்ளார்.இது “70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு தீங்கற்ற மற்றும் பொதுவான நிலை” என்று விவரித்தார். மருத்துவ பரிசோதனைகளில் “ஆழமான சிரை இரத்த உறைவு (DVT) அல்லது தமனி நோய்க்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று பார்பபெல்லா மேலும் கூறினார்.

“டொனால்ட் டிரம்ப் தன் கீழ்கால்களில் சிறிய வீக்கம் (mild swelling) இருந்ததாக குறிப்பிட்டார்,” “அதிக கவனத்துடன், இந்தக் கவலை வெள்ளை மாளிகை மருத்துவ குழுவினால் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டது,” இது, டிரம்பின் உடல்நிலையில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்பதை வலியுறுத்தும் நோக்கில், மருத்துவ ரீதியான அனைத்து தேவையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்குகிறது.

இருப்பினும், அதிபரின் கை கவனத்தை ஈர்த்தது இது முதல் முறை அல்ல. கடந்த பிப்ரவரியில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடனான சந்திப்பின் போது இதேபோன்ற காயம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Readmore: இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!. பத்திரிகையாளர்களின் இறப்பு எண்ணிக்கை 200 ஆக உயர்வு!. காசாவில் தொடரும் சோகம்!.

KOKILA

Next Post

ஏன் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டப்படுகிறது? இந்த பாரம்பரியத்திற்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா?

Tue Aug 26 , 2025
இந்தியாவில், வீட்டுக் கதவுகளில் மாவிலை தோரணம் கட்டுவது அலங்காரத்திற்காக மட்டுமல்ல, அது ஆழமான கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புனிதமான பாரம்பரியமாகும். பண்டிகைகள், திருமணங்கள் போன்ற சுப நிகழ்வுகளின் போது கதவுகளில் பச்சை மாவிலைகளை தோரணமாக கட்டுவது இந்திய கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும். இது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை அழைப்படதுடன் செழிப்பைத் தருகிறது என்று எங்களுக்கு வலுவான நம்பிக்கை உள்ளது. மா மாலை ஒரு மங்களகரமான […]
mango tree leaves

You May Like