வடமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், வேலைவாய்ப்பை தேடி தமிழ்நாட்டை நோக்கி பயணம் செய்வது கடந்த சில ஆண்டுகளில் ஒரு சாதாரணமாகிவிட்டது. பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், கையில் ஒரு பை மட்டும் வைத்துக்கொண்டு சென்னை சென்ட்ரல் போன்ற ரயில் நிலையங்களில் இறங்கும் காட்சிகளை அடிக்கடி காண முடிகிறது.
வடமாநில தொழிலாளர்கள் கட்டிட பணிகளைத் தாண்டி, ஹோட்டல், அலுவலகப் பணி, குளிர்பதன நிலையம், நூற்பாலை, செங்கல் சூளை, முடித்திருத்தம், விவசாயம் மற்றும் பல துறைகளில் தங்களை நிலைநிறுத்தி வருகின்றனர். இதற்கான முக்கிய காரணம் குறைந்த சம்பளத்தில் அதிக நேரம் வேலை பார்ப்பார்கள். ஆனால், இந்த வருகை எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்பு மற்றும் பலர் தமிழ்நாட்டிலேயே தங்கிவிடும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
இதனால், தேர்தல் மற்றும் குடிமக்கள் புள்ளி விவரங்களைப் பொருத்தவரை சில சந்தேகங்கள் எழுகின்றன. சமீபத்தில் பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்றது. இதில், 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இல்லை. எனவே, பீகாரில் இருந்து 6 லட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கக் கூடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சந்தேகம் எழுப்பியிருந்தார்.
இந்தப் பின்னணியில், தமிழ்நாட்டில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்து தெளிவான தரவுகள் இல்லாத நிலையில், தொழிலாளர் நலத்துறை “வெளிமாநிலத்தவர்கள் – 2025” எனும் பெயரில் ஒரு விரிவான கணக்கெடுப்பை நடத்த திட்டமிட்டுள்ளது. கட்டுமானத் தொழில்கள் மற்றும் பிற துறைகளில் பணியாற்றுபவர்களை பிரித்து, 6 மாதங்களில் இந்த ஆய்வை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தனி ஏஜென்சி தேர்வு செய்ய டெண்டரும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுபோன்ற ஒரு கணக்கெடுப்பு நடத்துவது இதுவே முதல் முறை.
Read More : இந்த 3 பொருட்கள் உங்கள் கிச்சனில் இருந்தால் உடனே தூக்கிப் போடுங்க..!! உயிருக்கே ஆபத்து விளைவிக்கும்..!!