செலவுக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் டென்சு உலகளவில் 3,400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்கிறது.
உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான டென்சு (Dentsu) , 3,400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.. 124 ஆண்டுகள் பழமையான ஜப்பானிய நிறுவனமான டென்சுவின் இணையதளத்தில் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அந்நிறுவன நிறுவனத்தின் தலைவரும் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிரோஷி இகராஷி, “நிதியாண்டின் முதல் பாதியில், எங்கள் ஜப்பான் வணிகம் சாதனை அளவில் நிகர வருவாய் மற்றும் அடிப்படை இயக்க லாபத்தை அடைந்தது. இது தொடர்ந்து ஒன்பதாவது காலாண்டிலும் வளர்ச்சியடைந்தது மற்றும் தொடர்ச்சியான மூன்றாவது காலாண்டிலும் ஐந்து சதவீதத்திற்கும் அதிகமான இயல்பான வளர்ச்சியை அடைந்தது.
மேலும், செலவுக் கட்டுப்பாடு மூலம், ஒருங்கிணைந்த அடிப்படை இயக்க லாபம் 7.2% அதிகரித்துள்ளது, மேலும் இயக்க லாபம் ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, மூன்று பிராந்தியங்களிலும் சர்வதேச வணிகம் தொடர்ந்து எதிர்மறையான வளர்ச்சியை அனுபவித்தது, இதன் விளைவாக மிகவும் சவாலான செயல்திறன் ஏற்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.
உலகளாவிய செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சர்வதேச வணிகத்தில் சுமார் 8 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக இகராஷி கூறினார். அதன்படி சுமார் 3400 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.. இந்தியாவில் பணிநீக்கம் செய்யப்பட உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை தெளிவாக இல்லை, ஆனால் இந்த எண்ணிக்கை கணிசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது…