பாஜகவின் 16 தொகுதி லிஸ்ட்.. அமித்ஷா போட்ட உத்தரவு… பதற்றத்தில் இபிஎஸ்! என்ன விஷயம் தெரியுமா?

deccanherald import sites dh files articleimages 2023 03 30 eps shah pti 1205076 1680189796

அமித்ஷா ஆலோசனைப்படி, பாஜக போட்டியிட விரும்பும் 16 தொகுதிகளை அதிமுகவிடம் பாஜக கொடுத்துள்ளது.

நெல்லையில் நேற்று பாஜகவின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.. மத்திய உள்துறை அமித்ஷா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர் 2026 தேர்தல் தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று கூறினார். மேலும் ராகுல்காந்தி ஒரு நாளும் பிரதமராக முடியாது எனவும், உதயநிதி ஸ்டாலின் எப்போது முதல்வராக முடியாது எனவும் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்..


இதை தொடர்ந்து இந்த கூட்டத்தை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அமித்ஷா கலந்து கொண்டார்.. அப்போது 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா விரிவான ஆலோசனை மேற்கொண்டாராம்..

அப்போது அதிமுகவிடம் பாஜக கேட்க வேண்டிய தொகுதிகள் குறித்த முக்கிய ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.. இதில் தமிழ்நாட்டில் பிரபலமான கோயில் நகரங்களை உள்ளடக்கிய தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கேட்டு பெற வேண்டும் என்று அமித்ஷா உத்தரவிட்டாராம்.. அமித்ஷாவின் ஆலோசனைப்படி கோயில் நகரங்களை உள்ளடக்கிய 16 தொகுதிகளின் லிஸ்டை அதிமுகவிடம் பாஜக கொடுத்துள்ளதாம்.. மேலும் இது அமித்ஷாவின் விருப்பம் என்பதையும் பாஜக நிர்வாகிகள் அதிமுக தலைமையிடம் சொன்னார்களாம்..

பழனி, திருச்செந்தூர், திருத்தணி, ஸ்ரீவில்லிப்புத்தூர், திருப்பரங்குன்றம், கும்பகோணம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல தொகுதிகள் அதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.. இவற்றில் பெரும்பாலும் அதிமுக செல்வாக்குள்ள தொகுதிகளாக இருப்பதால் அமித்ஷாவிடம் என்ன பதில் சொல்வது என்று அதிமுக தலைமை குழப்பத்தில் உள்ளதாம்.. மேலும் அடுத்தடுத்து தொகுதிகள் லிஸ்டை கொடுத்து பாஜகவின் தொகுதிகளை உறுதி செய்து, முன் கூட்டியே தேர்தல் வேலைகளை தொடங்க வேண்டும் என்று அமித்ஷா பாஜக நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி உள்ளாராம்..

Read More : “பிஞ்சுக் குழந்தைகளின் காலையுணவில் புழு முதல் பல்லி வரை கிடக்குது.. இது தான் திராவிட மாடலின் சாதனையா..” நயினார் நாகேந்திரன் சாடல்..!

RUPA

Next Post

உங்க ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா..? இதை செய்தால் போதும்.. புதிய கார்டு வீடு தேடி வரும்..!!

Tue Aug 26 , 2025
Lost your Aadhaar card? Just do this and a new card will come to your home..!!
aadhaar

You May Like