fbpx

தினமும் ஒரு கிளாஸ் பெருங்காயத் தண்ணீர் குடிச்சா இத்தனை நன்மைகளா!!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..

நாம் சமையல் அறையில் அதிகம் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று பெருங்காயம். பெருங்காயத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. பெருங்காயத்தை நாம் சமையலில் சேர்ப்பது நல்லது. அதே சமயம் பெருங்காய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது. இதற்க்கு முதலில் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ½ தேக்கரண்டி பெருங்காயத் தூளை சேர்க்கவும். இந்த பெருகாயம் நீரை குடிப்பதன் மூலம் நாம் பெறும் நன்மைகள் என்ன என்பது பற்றி பார்ப்போம்..

இந்த தண்ணீரை குடிப்பதால், செரிமான மண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி, அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது. அது மட்டும் இல்லாமல், மேலும் இது வயிற்றின் பி.ஹெச் நிலையை சரி செய்ய உதவுகிறது.

பெருங்காயத்தூள், உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடல் எடை விரைவில் குறைந்துவிடும். மேலும், நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், இதய ஆரோக்கியத்திற்கும் பெருங்காயம் மிகவும் உதவியாக இருக்கும்.

குளிர்காலத்தில் நாம் பெருங்காய தண்ணீரை எடுத்துக் கொண்டால், அது சளி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்துவிடும். மேலும், தலைவலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு பெருங்காய தண்ணீரைக் குடிப்பது மிகவும் சிறந்தது. ​
மாதவிடாய் காலங்களில், பெண்களுக்கு முதுகு மற்றும் அடிவயிற்றில் ஏற்படும் வலியைக் குறைக்கப் பெருங்காயம் பேருதவி புரிகிறது.

பெருங்காயத்தூள் கணைய செல்களை தூண்டி, இன்சுலின் சுரப்பியை சுரக்கிறது. இதனால் உங்கள் இரத்த சர்க்கரை அளவானது குறைகிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் தங்களுடைய உணவுகளில் பெருங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும், பெருங்காயத்தூள் மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவற்றை தீர்க்கும். இத்தனை நன்மைகள் கொண்ட பெருங்காய நீரை தினமும் காலையில் நாம் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது.

Maha

Next Post

கரும்பு விவசாயிகளுக்கு குட்நியூஸ்!... ஜிஎஸ்டி வரி குறைப்பு!... முழுவிவரம் இதோ!

Mon Oct 9 , 2023
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது, பல பொருட்களின் மீதான வரி கணிசமாக குறைக்கப்பட்டது. இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், தமிழக நிதியமைச்சர் தங்கம் […]

You May Like