Flash: “IPL போட்டிகளில் இனி விளையாடமாட்டேன்” – தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் அதிரடி அறிவிப்பு

ashwin2

ஐபிஎல் போட்டிகளில் இனி விளையாடப்போவதில்லை என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


2009 முதல் 2015 வரை சென்னை அணிக்காக விளையாடிய அஸ்வின், பின்னர் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார். அதன் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்தார். கடந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து 9.75 கோடி ரூபாய்க்கு தனது முதல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸுக்கு அஸ்வின் திரும்பினார்.

ஐபிஎல் தொடருக்குப் பிறகு தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடிய அஸ்வின் மீது பந்துவீச்சில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அது தவறு என்று பின்னர் தெரியவந்தது. இந்த நிலையில் தான் ஐபிஎல் போட்டிகளில் இனி விளையாடப்போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று சிறப்பான நாள், அதனால் ஒரு சிறப்பு ஆரம்பம். ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும். ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது. இனி ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்கள் என்னை பார்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் “கடந்த பல ஆண்டுகளாக அற்புதமான நினைவுகள் மற்றும் ஆதரவு வழங்கிய உறவுகளுக்கும், மிக முக்கியமாக IPL மற்றும் BCCI-க்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு முன்னால் இருப்பதை அனுபவித்து, சிறப்பாகப் பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என கூறியுள்ளார்.

அவர், அடுத்த மாதம் நடைபெற உள்ள SA20 மற்றும் ILT20 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் உலகின் பிற பிரபலமான டி20 லீக்குகளில் விளையாடும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கப்போவதாக ஊகிக்கப்படுகிறது.

Read more: இளைஞர்களே ரெடியா.. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2,250 காலிப்பணியிடங்கள்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..

English Summary

Tamil Nadu cricketer Ashwin Ravichandran has posted on the X site that he will no longer play in IPL matches.

Next Post

HBD Soori | சாதாரண காட்சியிலிருந்து சாதனையின் சிம்மாசனம் வரை..!! சூரியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

Wed Aug 27 , 2025
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் துணை நடிகராக இருந்த சூரி ஹீரோவாக மாறிவிட்டார். வெண்ணிலா கபடிகுழு படத்தில் பரோட்டா காட்சியில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நகைச்சுவை வேடங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். இன்று தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தையும் அவர் உருவாக்கியுள்ளார். கிராமத்தில் இருந்து சினிமா கனவுடன் வந்து, வாய்ப்பு இல்லாமல் அலையும் காலத்தில் இருந்து, இன்று முக்கிய இயக்குநர்கள் கதாநாயகனாகத் […]
Soori 2025

You May Like