சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து வந்தனர். இந்நிலையில், இந்த தம்பதி வசித்த வீட்டுக்கு எதிரில் இருந்த கோகுல் சந்தோஷ் என்ற இளைஞர், இரவில் அந்த தம்பதிகள் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஜன்னல் வழியாக அவர்களை வீடியோ எடுத்து வந்துள்ளார்.
மேலும், அந்த ஆபாசக் காட்சிகளை தனது நண்பர் மற்றும் சித்த மருத்துவ நிபுணர் ஹரிஹரசுதனிடம் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அந்த வீடியோவை ‘ரசித்து’ பார்த்ததோடு மட்டுமின்றி, அதனை பயன்படுத்தி அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்க திட்டம் போட்டுள்ளனர். இதையடுத்து, தங்களிடம் உள்ள வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய இருவரும், அந்த பெண்ணை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஒரு இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.
பயத்துடன் அந்த பெண், அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றபோது, அவரை ஒரு சொகுசு காரில் அழைத்துச் சென்று, அந்த வீடியோவை நேரில் காண்பித்து 3 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். மேலும், தங்களுடன் உல்லாசமாக இருக்கவும் வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து, அந்த பெண் நடந்ததை தனது கணவரிடம் தெரிவித்த நிலையில், இருவரும் உடனடியாக காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட சித்த மருத்துவர் ஹரிஹரசுதன், கோகுல் சந்தோஷ், அவர்களின் கூட்டாளி முத்துப்பாண்டி மற்றும் 17 வயதான ஒரு சிறுவன் என நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : HBD Soori | சாதாரண காட்சியிலிருந்து சாதனையின் சிம்மாசனம் வரை..!! சூரியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?