மத்திய அரசு பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் திருச்சி ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராணுவத்திற்கான ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்களை தயாரிக்கும் இத்தொழிற்சாலையில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் 73 காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பணியின் விவரங்கள்:
டர்னர் – 6
பிட்டர் (எலெட்ரானிக்ஸ்) – 6
கிரிண்டர் – 8
மெக்கானிஸ்ட் – 24
பெயிண்டர் – 3
வெல்டர் – 3
கெமிக்கல் செயல்முறை ஊழியர் – 3
எலெக்ட்ரோபிலேட்டர் (Electroplater) – 3
எக்ஸாபினர் (Examiner) – 8
OMHE – 1
மில்விரிட் (Millwright) – 2
எலெக்ட்ரிஷியன் – 4
பிட்டர் (G) – 1
பிட்டர் (Refrigeration) – 1
ஒதுக்கீடு:
- எஸ்சி (SC): 8
- ஒபிசி (OBC): 13
- EWS: 2
- பொதுப் பிரிவு (UR): 50
- முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen): 7
- மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு: 3 இடங்கள்
வயது வரம்பு:
- அதிகபட்ச வயது: 35 வயது
- குறைந்தபட்ச வயது: 18 வயது
மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு பதவிக்காலத்துடன் கூடுதலாக 3 வருடம் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின்னர் அந்தந்த தொழிற்பிரிவு அல்லது அதற்கு நிகரான தொழிற்பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு இதற்கு விண்ணப்பிக்கலாம். வெல்டர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் ஐடிஐ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.19,900 என்பது அடிப்படை சம்பளம் ஆகும். தோராயமாக ஒரு மாதத்திற்கு ரூ.30,845 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் NCVT / ஐடிஐ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையாகக் கொண்டு கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும். அதன்பின் தகுதி பெற்றவர்கள் தொழிற்பிரிவு தேர்வு அல்லது திறன் தேர்விற்கு அழைக்கப்படுவர்.
இறுதி தேர்வில் ஐடிஐ மதிப்பெண்கள் 80%, திறன் தேர்வு மதிப்பெண்கள் 20%
என கணக்கிடப்பட்டு இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். பட்டியலில் இடம் பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் பின் பணி நியமனம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
* இந்த பணியிடங்களுக்கு ஐடிஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.aweil.in/notice என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
* விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்கள் மற்றும் புகைப்படங்களை இணைக்க வேண்டும்.
* ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பிய பிறகு, அதனை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு, தேவையான ஆவணங்களின் நகல்களுடன் சேர்த்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
* இப்பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Chief General Manager,
Ordnance Factory Tiruchirappalli,
Tamil Nadu -620016.
கடைசி தேதி: செப்டம்பர் 21.



