நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து அவருக்கு Y+ பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா காவல்துறையை மேற்கோள் காட்டி, ஷாருக்கான் மாநில அரசிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். பதான் மற்றும் ஜவான் படங்கள் வெளியான பிறகு தனக்கு கொலை மிரட்டல் அழைப்புகள் வருவதாக கூறி புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் மகாராஷ்டிர மாநில புலனாய்வுத் துறை மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் ஆணையரகங்கள், மாவட்ட காவல் துறை மற்றும் சிறப்புப் பாதுகாப்புப் பிரிவுகளுக்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நடிகர் ஷாருக்கானுக்கு ஒரு எஸ்கார்ட் அளவிலான பாதுகாப்பை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
Y+ பிரிவில், நடிகருக்கு ஆறு கமாண்டோக்கள், நான்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அனுமதி வாகனம் உட்பட 11 பாதுகாப்புப் பணியாளர்கள் வழங்கப்படும். அவரது மும்பை இல்லமான மன்னாட்டில் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.