கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி சென்று தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.. அவரை கேரளாவின் எர்ணாகுளம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்..
கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு மதுபான பாரில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் ஐடி ஊழியர் உள்ளிட்ட ஒரு தரப்பினர் பாரில் இருந்து வெளியேறி காரில் புறப்பட்டுள்ளனர்.. அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற மற்றொரு தரப்பினர், காரில் இருந்த ஐடி ஊழியரை கடத்தி கடுமையாக தாக்கி உள்ளனர்.. பின்னர் அவரை பறவூர் பகுதியில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்..
இதையடுத்து பாதிக்கப்பட்ட ஐடி ஊழியர் எர்ணாகுளம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மிதுன், அனீஸ், சோனா மோள் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.. இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் நடிகை லட்சுமி மேனனுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் அவர் தலைமறைவாகிவிட்ட நிலையில் எர்ணாகுளம் போலீசார் நடிகை லட்சுமி மேனனை தீவிரவாக தேடி வருகின்றனர்..
இந்த நிலையில் மதுபான பாரில் நடந்த தகராறு தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.. அதில் போதையில் லட்சுமி மேனனின் தோழில் காரில் இருக்கும் நபர்களிம் தகராறில் ஈடுபடுவது லட்சுமி மேனன் அவரை தடுப்பதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன..
நடிகை லட்சுமி மேனன் கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, மிருதன், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். சில மலையாள படங்களிலு அவர் நடித்துள்ளார்.. தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வரும் அவர் கடைசியாக சப்தம் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..