கணவரை கொன்ற நபருடன் கள்ளத்தொடர்பு..!! பெற்ற 2 மகள்களையும் காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்..!!

rape 1

நாட்டில் மாணவிகள், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் 1090 என்ற உதவி எண்ணிற்கு நள்ளிரவு நேரத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய சிறுமிகள், தங்களின் வளர்ப்பு தந்தை எங்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக புகாரளித்தனர்.


இதையடுத்து, போலீசார், உடனடியாக சிறுமிகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். அங்கு நடைபெற்று வந்த கொடுமைகளை சிறுமிகள் விவரித்தனர். விசாரணையின் போது வெளிவந்த விவரங்கள், வழக்கமான பாலியல் குற்றங்களை விட, கொடுமையாக இருந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுமிகளின் இயல்பான குடும்ப சூழ்நிலை ஏற்கனவே சிக்கலானதாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு, இவர்களது தந்தை, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். அந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டும், தேவையான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் முக்கிய சந்தேக நபர் ஒருவர் விடுவிக்கப்பட்டார். காலப்போக்கில், அந்த விடுவிக்கப்பட்ட நபரையே, குழந்தைகளின் தாயார் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில், தாய் வீட்டில் இல்லாத நேரங்களில் வளர்ப்பு தந்தையின் தவறான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அதனைச் சிறுமிகள் தங்கள் தாயிடம் கூறிய போதும், அவர் நடவடிக்கை எடுக்காமல், அவர்களை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். தனிமை, பயம், மற்றும் பாதுகாப்பற்ற நிலைமையால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிகள், 1090 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்களுக்கு நடந்த கொடுமைகளை புகாரளித்தனர். இதையடுத்து, வளர்ப்பு தந்தையையும், சிறுமிகளின் தாயையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More : உங்களுக்கு டேட்டா என்ட்ரி வேலை தெரியுமா..? மாதம் ரூ.40,000 கிடைக்கும்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

CHELLA

Next Post

இந்த 7 வகையான மக்கள்ஒருபோதும் கிரெடிட் கார்டு வாங்கக் கூடாது! அதிக இழப்பு ஏற்படும்.. ஏன் தெரியுமா?

Wed Aug 27 , 2025
இன்றைய காலகட்டத்தில், கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் ஷாப்பிங், பண்டிகை சலுகைகள், வெகுமதி புள்ளிகள் மக்களை அதிகமாக ஈர்க்கின்றன. சிலர் இந்த புள்ளிகளை பணமாக மாற்றி நன்மைகளைப் பெற பயன்படுத்துகிறார்கள். ஆனால் கேள்வி என்னவென்றால், அனைவருக்கும் கிரெடிட் கார்டு தேவையா? பதில் இல்லை; சிலருக்கு, இது தீங்கு விளைவிக்கும் மற்றும் அவர்களின் CIBIL ஸ்கோர் பாதிக்கப்படும்.. பின்வரும் 7 வகையான மக்கள் கிரெடிட் கார்டு […]
credit card2 1

You May Like