கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்று உலகையே புரட்டிப் போட்டது. தொழில், கல்வி மற்றும் பொதுவாழ்க்கையை கடுமையாக பாதித்த இந்த தொற்றால், பலரும் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். அதேசமயம், முழு ஊரடங்கின் தாக்கம் நேரடியாக தெருவோர வியாபாரிகளை பாதித்தது. இதனால், அவர்களின் வாழ்வாதாரமே முடங்கியது.
அப்போது தான், மத்திய அரசு ”பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பர் நிதி” (PM SVANidhi) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. குறைந்த வட்டியில், எளிமையான விதிமுறைகளுடன், கடன்களை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வணிகத்தை மீண்டும் தொடங்க விரும்பும் தெருவோர வியாபாரிகளுக்கு இது ஒரு புதிய தொடக்கமாக அமைந்தது.
இத்திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக கடன்கள் வழங்கப்படுகின்றன. முதற்கட்டத்தில் ரூ.10,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனை முறையாகவோ அல்லது முன்கூட்டியே திருப்பிச் செலுத்தும் வியாபாரிகளுக்கு இரண்டாவது கட்டத்தில் ரூ.20,000 வரை வழங்கப்படுகிறது. மூன்றாவது கட்டத்தில் ரூ.50,000 வரை கடன் பெற முடியும்.
மேலும், இந்தக் கடனுக்கான வருடாந்த வட்டியில் 7% வரை மானியம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, இந்த வட்டிமானியத் தொகை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதோடு, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், மாதம் ரூ.100 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இதை தொடர்ந்து பெறும் வியாபாரிகள், ரூ.1,200 வரை ஊக்கத்தொகையை அனுபவிக்க முடியும்.
இந்த சூழலில் தான் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் முதற்கட்ட கடன் தொகை ரூ.10,000-இல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதற்கட்ட கடனை முறையாக திருப்பிச் செலுத்தினால், இரண்டாம் கட்டத்தில் ரூ.25,000 வரை கடன் பெற முடியும். இது இதற்கு முன்பு ரூ.20,000 மட்டுமே இருந்தது. மூன்றாம் கட்டத்தில் வழங்கப்படும் கடன் தொகை ரூ.50,000 என்ற அளவிலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : மணி ப்ளாண்ட் செடியை விட பவர்..!! இதை மட்டும் உங்கள் வீட்டில் வைத்தால் பணம் கொட்டும்..!!